உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாக பார்க்கப் போவது அனுமன் ஆசனம். இது ஆங்கிலத்தில் குரங்கு நிலை என்றழைக்கப்படுகிறது. இந்த அனுமன் ஆசனம் உங்களுக்கு ராமாயணத்தில் ராமர் - அஞ்சநேயரின் காட்சிகளை நினைவுப்படுத்தும். அனுமன் ஆசனம் இடுப்பு பகுதியில் இருந்து இரு கால்களின் தொடை பகுதி வரை நல்ல பலன்களை தரும். 20-30 நாட்கள் தொடர் பயிற்சி செய்தால் அனுமன் ஆசனத்தை உங்களால் செய்ய முடியும். எப்போதுமே ஆசனம் செய்யும் முன்பாகவும், ஆசனம் செய்த பிறகு சில பயிற்சி ஆசனங்கள் செய்வது நல்லது.
அனுமன் ஆசனத்திற்கு முன்பான பயிற்சி
- சூரிய நமஸ்காரத்தின் மூன்றாவது நிலையில் இருந்து இடது காலினை பின்னே நீட்டி விரல்களை தளர்த்தவும்.
- வலது கால் 90 டிகிரியில் இருக்க வேண்டும். இரண்டு கைகளையும் வலது காலின் அருகே சமமாக வைக்கலாம்.
- இப்போது இடுப்பின் இடது பகுதியில் இடது கையினால் அழுத்தம் கொடுத்து தொடை நன்கு விரியும்படி செய்யுங்கள். வலது காலின் தசைப்பகுதியில் அழுத்தம் குறைவாக தெரியும்.
- ஓட்டப்பந்தயத்திற்கு தயாராகும் நிலையில் இருப்பீர்கள். அடுத்ததாக கால்களை மாற்றிக் கொள்ளலாம். வலது காலினை பின்னே கொண்டு சென்று இடது காலை 90 டிகிரியில் வைக்கவும்.
- இந்த பயிற்சியை பழகிய பிறகு கால்களை சிறிது விநாடிகளில் முன்னும் பின்னும் கொண்டு செல்லவும். 15-20 முறை செய்து பழகிவிட்டால் அனுமன் ஆசனம் செய்வதற்கு நீங்கள் தயார்.
அனுமன் ஆசனம் பயிற்சி
- சூரிய நமஸ்காரத்தின் மூன்றாவது நிலையில் இருந்து இரண்டு கால்களையும் ஒரே நேர் கோட்டில் வைத்து வலது காலினை முன்னும், இடது காலினை பின்னும் வைத்து தொடைப்பகுதி முழுவதையும் தரையில் அழுத்தவும்.
- எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு இரண்டு கால்களையும் நீட்டி தரையில் அழுத்தம் கொடுத்து தலைக்கு மேல் கைகளை உயர்த்தி சூரிய நமஸ்காரம் செய்யவும்.
- கால்களை பொறுமையாக இயல்பு நிலைக்கு கொண்டு வந்து ஆழ்ந்தை மூச்சை எடுத்து வெளியே விட்டு தளர்த்திக் கொள்ளலாம்.
- குரங்கு நிலையை அடைந்தவுடன் 5 விநாடிகளுக்கு அப்படியே இருக்கவும். இதே போல் இடது கால் முன்னும், வலது கால் பின்னும் முயற்சி செய்யுங்கள்.
- யாராவது உங்களை கண்டால் உடலும், கால்களும் 180 டிகிரியில் தெரிய வேண்டும்.
- ஆசனத்தை முடித்த பிறகு கால்களை தளர்த்தி தொடைப் பகுதியில் மசாஜ் செய்து தளர்த்திக் கொள்ளுங்கள்.
மேலும் படிங்கமனதை அமைதிப்படுத்தி நிதானமாக முடிவெடுக்க சவாசனம் பயிற்சி செய்யுங்க!
அனுமன் ஆசனம் நன்மைகள்
- பிறப்புறப்பு பகுதி, பிரசவத்திற்கு தயாராகும் கர்ப்பிணிகளின் வயிற்று பகுதி வலுவாகும்.
- உடலின் மொத்த தசைகளும் இறுக்கமடைந்து தளர்வு பெறும்.
- தொடர்ந்து பயிற்சிக்கும் போது சிறுநீரகத்தின் செயல்பாடு மேம்படும்.
- உள்ளுறுப்புகள், கல்லீரல் ஆகியவை பயன்பெறும். ஹார்மோன் சீராக சுரக்கும்.
- உடலின் நெகிழ்வுத்தன்மை கட்டாயம் அதிகரிக்கும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation