உடலும், மனதும் ஆற்றலுடன் செயல்பட தியானம் செய்பவர்கள் இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்

உடலுக்கும், மனதுக்கும் பல நன்மைகளை தரக்கூடிய தியானத்தை உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்ற விரும்பினால், நீங்கள் சில விதிகளைப் பின்பற்ற வேண்டும். இப்படி செய்வதால் தியானத்தின் முழு பலனை பெற முடியும். 
image

தியானம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. தியானம் செய்யும்போது, அது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, இதனால் மனதிற்கு அமைதி கிடைக்கிறது. இது மட்டுமல்லாமல் தொடர்ந்து தியானம் செய்வதால் மனதைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தியானத்தின் மூலம் உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் நன்மைகளைப் பெறுவீர்கள். உங்களுக்குள் நேர்மறை அதிகரிக்கும் போது, நோய்களை எதிர்த்துப் போராடும் உடலின் திறனும் மேம்படும். மேலும், நீங்கள் அதிக சுறுசுறுப்பாக உணர்கிறீர்கள்.

தினமும் பத்து நிமிடங்கள் மட்டும் தொடர்ந்து தியானம் செய்வதன் மூலம் எண்ணற்ற நன்மைகளைப் பெறத் தொடங்குகிறீர்கள். ஆனால் இந்த நன்மைகள் அனைத்தும் தியானம் சரியாகச் செய்யும்போதுதான் கிடைக்கும். சிலர் தொடர்ந்து தியானம் செய்தாலும் போதுமான நன்மைகளைப் பெறுவதில்லை, ஏனென்றால் அவர்கள் தியான விதிகளைப் பின்பற்றுவதில்லை. எனவே, இன்று இந்தக் கட்டுரையில், தியானம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய சில விதிகளைப் பற்றி பார்க்கலாம்.

தனி அறையைத் தேர்வு செய்யவும்

தியானம் செய்ய விரும்பும் போது சிறிது அமைதி நிலவும் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் விரும்பினால் தனிமை இருக்கும் ஒரு தனி அறையைத் தேர்வு செய்யலாம். அறையை காற்றோட்டமாகவும், குறைந்தபட்ச வெளிச்சமாகவும் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். மேலும் அறையிலிருந்து எந்த விதமான வாசனையும் வரக்கூடாது. உங்கள் அறையின் சுவர்களில் வெள்ளை அல்லது வெளிர் நிற வண்ணப்பூச்சு இருக்க வேண்டும். மேலும் இந்த அறையில் உள்ள சுவர் பாடங்களை முடிந்தவரை குறைவாக வைத்திருங்கள்.

yoga pose 1

சரியான ஆசனத்தை வைத்திருங்கள்

தியானம் செய்யும்போது, நீங்கள் வசதியான ஆசனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதனால் நீங்கள் வசதியாக உட்கார்ந்து நீண்ட நேரம் தியானம் செய்யலாம். மறுபுறம், முதுகுவலியால் தொந்தரவு செய்யப்பட்டால் தியானம் செய்வதற்கு முன், கீழே ஒரு மெத்தையை வைத்துக்கொண்டு பின்னால் ஒரு சுவரின் ஆதரவுடன் உட்கார்ந்து செய்யுங்கள்.

சரியான நேரத்தில் செய்ய வேண்ண்டும்

தியானத்திற்கான நேரத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். சரியான நேரத்தில் தியானம் செய்வது அதிக நன்மைகளைத் தரும். தியானம் செய்ய சரியான நேரம் காலை அல்லது இரவு என்று கருதப்படுகிறது. நீங்கள் காலையில் தியானம் செய்தால், நீங்கள் எழுந்து பல் துலக்கிய பிறகு தியானம் செய்யலாம். நீரிழிவு நோயாளிகள் காலையில் லேசான உணவை சாப்பிட்ட பிறகு தியானம் செய்ய வேண்டும். நீங்கள் இரவில் தியானம் செய்தால், இரவு உணவிற்குப் பிறகு குறைந்தது ஒரு மணி நேர இடைவெளியை வைத்திருக்க வேண்டும். உணவு சாப்பிட்ட உடனேயே தியானத்திற்கு உட்கார வேண்டாம். தியானம் செய்த பிறகு தூங்க வேண்டும்.

தியானம் செய்ய எப்போது தொடங்க வேண்டும்

இரவு உணவுக்குப் பிறகு நீங்கள் தியானம் செய்யப் போகிறீர்கள் என்றால், தியானம் செய்வதற்கு முன்பு பருவக்கால உணவுகளை மட்டுமே சாப்பிடுவதையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். தியானத்திற்கு முன் காரமான உணவு அல்லது அதிக வறுத்த உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இது மட்டுமல்லாமல் தியானம் செய்வதற்கு முன் பளிச்சிடும் திரைப்படங்களைப் பார்க்க வேண்டாம். மேலும் அத்தகைய ஆடைகளை அணிய வேண்டாம். இது உங்கள் தியானத்தில் பாதகமான விளைவை ஏற்படுத்துகிறது.

yoga pose 2

தியானம் செய்யும் முறை

சிலர் தியானத்தின் போது தங்கள் மனதை வலுக்கட்டாயமாக அமைதிப்படுத்த முயற்சி செய்கிறார்கள் அல்லது எந்த வகையான எண்ணங்களும் தங்கள் மனதில் வராமல் இருக்க முயற்சி செய்கிறார்கள். இருப்பினும், இதைச் செய்வதன் மூலம், பலவிதமான எண்ணங்கள் அவர்களின் மனதில் வருகின்றன. உங்கள் மனதை சுதந்திரமாக விட்டுவிட்டு, உங்கள் மூச்சின் இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது. படிப்படியாக, உங்கள் எண்ணங்கள் குறையும். நீங்கள் விரும்பினால், இந்த நேரத்தில் உங்கள் மனதை அமைதிப்படுத்த ஓம் மந்திரத்தையும் உச்சரிக்கலாம்.

மேலும் படிக்க: ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ள திரிபலா பழங்களில் இருக்கும் அற்புத நன்மைகள் பற்றி தெரியுமா?

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP