நெய் என்பது நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய உணவு வகைகளில் ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அனைத்து விதமான உணவுகளுடனும் நெய் சேர்ப்பது சரியான தேர்வாக இருக்காது. சில வகையான உணவு பொருட்களுடன் நெய் சேர்ப்பது, செரிமான கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
மேலும் படிக்க: அமிலத்தன்மை பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற உணவு முறையில் செய்ய வேண்டிய முக்கியமான 5 மாற்றங்கள்
இந்திய உணவு வகைகளில் நெய்க்கு முதன்மையான இடம் இருக்கிறது. நறுமணம் முதல் ஆரோக்கியம் வரை பல நன்மைகள் நெய்யில் இருக்கின்றன. ஆயுர்வேத இலக்கியங்களில் நெய்யின் சிறப்புகள் குறித்து பல்வேறு தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்ஸ், கொழுப்பில் கரைக்கூடிய வைட்டமின்களான ஏ, டி மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் நெய்யில் இருக்கின்றன.
தினமும் இரண்டு ஸ்பூன் வரை நெய் எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இது செரிமானத்தை சீராக்க உதவுகிறது. எனினும், ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ளது என்ற காரணத்திற்காக அனைத்து விதமான உணவுகளுடனும் நெய்யை சேர்க்க கூடாது. அந்த வகையில், எந்த மாதிரியான உணவுகளுடன் நெய்யை பயன்படுத்தக் கூடாது என்று காணலாம்.
நெய் மற்றும் தேனில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகள் இருக்கின்றன. இவை, அழற்சி எதிர்ப்பு, அன்டி ஆக்சிடென்ட்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளன. ஆனால், இவற்றை ஒன்றாக சேர்த்து உண்பது, உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாறு நீண்ட நாட்களுக்கு எடுத்துக் கொண்டால், சில வகையான தொற்றுகளை ஏற்படுத்தும்.
நெய்யுடன் சேர்க்க கூடாத உணவுகளில் தயிரும் இடம்பெறுகிறது. நெய் சற்று வெதுவெதுப்பான மற்றும் எண்ணெய் போன்ற தன்மையுடன் இருக்கும். இதற்கு மாறாக, குளிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும், சற்று கனமானதாகவும் தயிர் இருக்கிறது. எனவே, இவை இரண்டையும் சேர்த்து உட்கொள்வது செரிமான மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க: உடல்நிலையில் எப்போதும் சோர்வாக இருப்பது போல் உணர்ந்தால் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
பொதுவாக குளிர் காலங்களில் முள்ளங்கி அதிகமாக கிடைக்கும். இதனை சாம்பார் உள்ளிட்டவற்றுடன் சேர்த்து சமைப்பது வழக்கம். எனினும், சுவை, தன்மை ஆகிய இரண்டிலும் முள்ளங்கி மற்றும் நெய் மாறுபட்டவை. இவற்றை அதிக அளவில் ஒன்றாக எடுத்துக் கொண்டால் வயிறு உப்புசம், செரிமான கோளாறு ஏற்படும். அந்த வகையில், இவற்றை ஒன்றாக எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம்.
ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் ஆகிய சிட்ரஸ் பழங்கள் நம் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடியது என எல்லோருக்கும் தெரியும். ஆனால், அமிலத் தன்மை கொண்ட இந்த பழங்களுடன் நெய்யை சேர்த்து சாப்பிடுவது செரிமானத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை, வாயுத் தொல்லை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அதன்படி எவ்வளவு சத்தான உணவுகளாக இருந்தாலும், சில வகையான பொருட்களை ஒன்றொடு ஒன்று சேர்த்து சாப்பிடுவதை மருத்துவர்கள் பரிந்துரைப்பது இல்லை. எனவே, இவற்றை கருத்திற்கொண்டு சரியான முறையில் நெய்யை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com