
உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப் போகும் ஆசனம் சந்திர பேதன பிராணயாமம். இது சாதாரண மூச்சு பயிற்சியை போல தான். ஆங்கிகத்தில் single nostril breath yoga என்று அழைக்கப்படுகிறது. இதை செய்வதற்கு பத்மாசனம் நிலையில் உட்காருங்கள். பத்மாசனாவில் உட்கார்ந்து சந்திர பேதன பிராணயாமம் செய்யும் போது பலன்கள் அதிகமாகக் கிடைக்கும். பத்மாசனம் நிலையில் இருந்து இந்த ஆசனத்தை செய்வது கடினமாக இருந்தால் சுகாசனம் நிலையில் செய்யலாம்.
இந்த ஆசனத்தை செய்வதற்கு முதுகு தண்டு நேராக இருக்க வேண்டும். முதுகு, தோள்பட்டை, தலை ஒரே நேர் கோட்டில் இருப்பது அவசியம்.
இப்போது இடது கையில் ஆள் காட்டி விரலையும் கட்டை விரலையும் சேர்த்து சின் முத்ரா வைக்கவும். வலது கையில் ஆள் காட்டி விரல், நடுவிரலை மடக்க போகிறோம். கண்களை மூடிக்கொண்டு வலது மூச்சுக் குழாயை கட்டை விரலால் மூடுங்கள்.
இடது மூச்சு குழாய் வழியாக மூச்சை உள்ளே நன்கு இழுக்கவும். நுரையீரல் முழுவதையும் காற்றால் நிரப்புங்கள்.
இப்போது இடது மூச்சுக்குழாயை மூடிவிட்டு கட்டை விரலை எடுத்து வலது மூச்சுக்குழாயை திறக்கவும். வலது மூச்சுக்குழாய் வழியாக மூச்சை விடுங்கள்.
இது மிகவும் எளிது தான். அதாவது இடது மூச்சுக்குழாய் வழியாக காற்றை உள்ளே இழுத்து வலது மூச்சுக்குழாய் வழியாக மூச்சை வெளியே விட வேண்டும்.
மேலும் படிங்க வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் ஆனந்த பாலாசனம்
இதே போல மீண்டும் ஒரு முறை செய்யுங்கள். உடல் சூடாக இருக்கும் போது அதை குளிர்ச்சிப்படுத்த செய்யும் ஆசனமே சந்திர பேதனா பிராணயம் ஆகும்.
மூச்சை உள்ளே இழுக்கும் போது உங்கள் வயிறு வர வேண்டும். மூச்சை வெளியே விடும் போது வயிறு உள்ளே போக வேண்டும்.
இது நமது உடலில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற அற்புதமான வழியாகும். நீங்கள் இந்த ஆசனத்தை நன்றாக பழகி விட்டால் மூச்சை உள்ளே இழுத்த பிறகு ஏழு விநாடிகள் வரை இழுத்து பிடித்திருக்கலாம்.
ஆனால் ஆரம்பிக்கும் போது இப்படி செய்ய வேண்டாம். உடல் சூட்டை குறைக்க வெயில் காலத்தில் இந்த ஆசனத்தை செய்வது மிகவும் நல்லது.
மேலும் படிங்க ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும் கூர்மாசனம்
தினமும் காலை எழுந்தவுடன் உடலை சுத்தப்படுத்திய பிறகு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு குறைந்தது ஐந்து நிமிடத்திற்கு இந்த ஆசனத்தை செய்யுங்கள்.
உடலில் நல்ல இரத்த ஓட்டத்திற்கு இந்த மூச்சு பயிற்சி செய்வது அவசியம். இந்த ஆசனம் செய்வது மூளைக்கும், உடலுக்கு சக்தியை கொடுக்கும்.
இது போன்ற யோகாசன கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com