herzindagi
spinal twist pose

இடுப்பு பகுதியில் அதிக கொழுப்பா ? வக்ராசனம் செய்து எளிதில் குறைக்கலாம்!

இடுப்பு பகுதியில் அதிக கொழுப்பினால் சதை போட்டுள்ளதே என கவலை வேண்டாம். தினமும் வக்ராசனம் செய்யுங்கள். எதிர்பார்த்த மாற்றம் நிகழும்.
Editorial
Updated:- 2024-08-23, 10:32 IST

உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப் போவது வக்ராசனம். உடலை முறுக்குவதற்கு செய்யும் ஆசனங்களில் இது மிகவும் அடிப்படையான ஆசனமாகும். வக்ராசனம் போலவே பல ஆசனங்கள் உள்ளன. உடலை முறுக்கி மிடுக்காகத் தோற்றமளிக்க விரும்புவோர் தினமும் வக்ராசனம் செய்யலாம். ஆசனம் செய்யும் முன்பாக சில பயிற்சிகளை செய்யலாம். உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் இனி அடுத்தடுத்த பதிவுகள் விரைவாக வெளியிடப்படும்.

வக்ராசனத்திற்கு முன்பாக பயிற்சி

  • தரையில் சப்பளங்கால் போட்டு அமர்ந்து அல்லது பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் ஆகிய நிலையில் உட்காரவும். இடுப்பிற்கு மேல் உள்ள பகுதியை முறுக்குவதற்கு ஏதுவாக உட்காரவும்.
  • இப்போது இடது கையை வலது மூட்டில் வைக்கவும். வலது தோள்பட்டையை பின்நோக்கி திருப்பி வலது கையை உடலில் இருந்து ஒரு அடிக்கு மேல் இடைவெளி விட்டு வைக்கவும்.
  • இதை செய்யும் போது நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து முதுகுத்தண்டை நேராக வைத்து தோள்பட்டையை மட்டும் திருப்பவும். தலையையும் வலது புறமாக பின்னே திருப்பி மூன்று விநாடிகளுக்கு இதே நிலையில் இருக்கவும்.
  • இதே போல வலது கையை இடது மூட்டில் வைத்து இடது தோள்பட்டை மற்றும் தலையை இடது புறமாக பின்நோக்கி திருப்பவும்.
  • நான்கு ஐந்து முறை செய்த பிறகு உடலில் முறுக்குத் தன்மையை உங்களால் உணர முடியும். வக்ராசனம் செய்வதற்கும் இது உதவிகரமாக அமையும்.
  • இயல்பு நிலைக்கு திரும்பி ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும்.

மேலும் படிங்க ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு தரும் மலாசனம்


Vakrasana steps to lose waist fat

வக்ராசனம் பயிற்சி

  • தரையில் கால்களை நேராக நீட்டி அமர்ந்து கைகளை பக்கவாட்டில் வைக்கவும். முதுகுத் தண்டு நேராக இருப்பது அவசியம்.
  • இப்போது வலது காலை பாதியாக அதாவது 90 டிகிரிக்கு மடக்கவும். (திருமணத்தில் பெண்கள் அமர்வது போல)
  • அடுத்ததாக வலது கையை  உடலில் இருந்து ஒரு அடி தள்ளி பின்நோக்கி வைக்கவும். இடது கையை வலது மூட்டின் வலது பக்கத்தில் இருந்து அழுத்தி வலது காலின் மணிக்கட்டை பிடிக்கவும்.
  • இடது கால் மடங்கி இருக்க கூடாது. நேராக இருப்பது அவசியம். பொறுமையாக இயல்பு நிலைக்கு திரும்பி ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும். தலையை வேகமாக திருப்பினால் கழுத்தில் பிடிக்க வாய்ப்புண்டு.
  • இதே போல இடது காலை பாதியாக அதாவது 90 டிகிரிக்கு மடக்கவும்.
  • அடுத்ததாக இடது கையை  உடலில் இருந்து ஒரு அடி தள்ளி பின்நோக்கி வைக்கவும். வலது கையை இடது மூட்டின் இடது பக்கத்தில் இருந்து அழுத்தி இடது காலின் மணிக்கட்டை பிடிக்கவும்.
  • வலது கால் மடங்கி இருக்க கூடாது. பத்து விநாடிகளுக்கு இதே நிலையில் இருந்து பொறுமையாக இயல்பு நிலைக்கு திரும்பி ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும்.

மேலும் படிங்க வயிற்று கொழுப்பை குறைக்க உதவும் சக்கி சலனாசனம்

இடுப்பு கொழுப்பை கரைக்கும் வக்ராசனம்

வக்ராசன யோகாவை தொடர்ந்து செய்து வந்தால் முதுகு, தொடைகள், கால்கள், வயிறு மற்றும் பிற பகுதிகளை முறுக்கு தன்மை பெறும். குறிப்பாக இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்க முடியும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com