Walking benefits: நடைப்பயிற்சி செய்வதால் நம் உடலுக்கு இத்தனை நன்மைகளா?

தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்வதனால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

walking benefits

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் நடக்கும் பழக்கமே இல்லை. காரணம் இந்த வேகமான வாழ்க்கைமுறையில் நாம் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். பக்கத்தில் சென்றால் கூட பைக் அல்லது கார் எடுத்து செல்பவர்கள் தான் அதிகம். நம் முன்னோர்கள் இன்றும் ஆரோக்கியமாக இருக்க ஒரு முக்கிய காரணம் என்ன தெரியுமா? அது தான் நடைப்பயிற்சி. அவர்கள் தினமும் குறைந்தது இரண்டு கிலோமீட்டர் தூரம் ஆவது நடந்து செல்வார்கள். அதே போல அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுமுறையும் தினமும் நடைப்பயிற்சியும் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. தினமும் நடைபயிற்சி செய்வதால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மன நல ஆரோக்கியம் மேம்படும்:

நாம் அனைவரும் தினமும் செய்யக்கூடிய ஒரு எளிதான பயிற்சி என்னவென்று கேட்டால் அது நடைபயிற்சி என்று தான் கூற வேண்டும். தினமும் காலையில் எழுந்ததும் நடைபயிற்சி செய்வது நம் உடல் ஆரோக்கியத்தை மட்டும் இல்லாமல் மனநிலை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. தினசரி நடைபயிற்சி செய்தால் அதிக ஹார்மோன்களை உங்கள் உடல் உற்பத்தி செய்ய உதவும். உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன அழுத்தத்தை குறைக்கவும், பதற்றத்தை குறைக்கவும், மனசோர்வை கட்டுப்படுத்தவும், நேர்மறை எண்ணங்களை உருவாக்கவும், அதிக நேரங்களில் நமக்கு ஏற்படும் மனநல பிரச்சனைகளை தீர்க்கவும் தினமும் நடைபயிற்சி செய்வது அவசியம்.

உடல் எடை குறையும்:

walk ()

தினசரி காலையில் நடை பயிற்சி செய்வது உங்கள் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும் குறைந்தது 20 அல்லது 30 நிமிடமாவது தினமும் காலையில் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் நீங்கள் சுமார் 400 கலோரிகளை எரித்து விடலாம் என்று கூறப்படுகிறது. உங்கள் வீட்டின் அருகில் உள்ள பூங்கா அல்லது ஏதேனும் சாலையில் நடைப்பயிற்சி செய்யலாம். எடை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

நம்மில் பலருக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதினால் பல நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினசரி காலை நேரத்தில் நடை பயிற்சி செய்வது ஒரு சிறந்த மருந்து ஆகும். இது உங்களை பல பாக்டீரியா தொற்றுகளிலிருந்து விலக்கி பல்வேறு வைரஸ் நோய்கள் ஏற்படாமல் இருக்க உதவும்.

உடல் வலுவாகும்:

தினமும் காலையில் 20 அல்லது 30 நிமிடம் நடைபயிற்சி செய்வதன் மூலம் நம் உடலில் உள்ள பெரும்பாலான பகுதிகள் வலுவடைகிறது. குறிப்பாக நம் உடலில் உள்ள தசைகள் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் பெரிதும் வலுவடையும். தினசரி காலையில் நடைப்பயிற்சி செய்து வந்தால் தசை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP