6 6 6 நடைபயிற்சி விதியை பின்பற்றினால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்

6 6 6 என்ற எளிதான நடைபயிற்சியை தினமும் பின்பற்றினால் உங்களுடைய உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதய ஆரோக்கியம் மேம்படும், மன அழுத்தம் குறையும், மன தெளிவு கிடைக்கும்.
image

6 6 6 நடைபயிற்சி விதி என்பது மிகவும் எளிதான மற்றும் பயனளிக்க கூடிய உடற்பயிற்சி ஆகும். பிஸியான வாழ்க்கையில் இந்த நடைபயிற்சியை மேற்கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும். எனினும் இதை தொடர்ந்து செய்ய வேண்டும். 6 6 6 நடைபயிற்சி என்பது தினமும் காலை 6 மணி மற்றும் மாலை 6 மணிக்கு 60 நிமிடம் நடைபயிற்சி செல்ல வேண்டும். நடைபயிற்சி சென்று வந்த பிறகு 6 நிமிடம் உங்களை அமைதிப்படுத்தவும். இப்படி தொடர்ந்து செய்தால் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

காலை 6 மணிக்கு நடைபயிற்சி

தினமும் சராசரியாக 30 நிமிடம் நடைபயிற்சி சென்றால் இதய நோய் அபாயத்தை 35 விழுக்காடு குறைக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலை 6 மணிக்கு நடைபயிற்சி செல்வது பல பயன்களை தருகிறது. உடலில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்க இது சிறந்த நேரமாகும். காலையில் சுத்தமான காற்றை சுவாசிக்க போது உங்கள் மனம் நிம்மதி பெறும். உடலில் சீரான இரத்த ஓட்டம் இருக்கும். காலையிலேயே உடற்பயிற்சியை முடித்துவிட்டால் வேலைக்கு இடையே அதற்கென தனி நேரம் ஒதுக்க வேண்டியதில்லை.

மாலை 6 மணிக்கு நடைபயிற்சி

மாலை 6 மணிக்கு நடைபயிற்சி சென்றால் நாள் முழுவதும் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து நீங்கள் விடுபடலாம். மாலை 6 மணிக்கு நடைபயிற்சி சென்று வந்தால் இரவு நேரத்தில் தூக்கம் நன்றாக வரும். மாலை 6 மணி பலருக்கும் வேலை நேரமாக இருக்கலாம். இது சாத்தியப்படவில்லை என்றால் அலுவலக வளாகத்திலேயே இரண்டு நிமிடம் சுறுசுறுப்பாக கைகளை வீசி நடக்கவும்.

6 6 6 walking routine

60 நிமிட நடைபயிற்சி செல்வதன் பலன்கள்

60 நிமிடம் நடைபயிற்சி செல்வதனால் உடலில் கொழுப்பு கட்டாயமாக கரையும். நன்கு சுவாசித்து நடைபயிற்சி சென்றால் நுரையீரல் வலுப்பெறும். அதே போல வாரத்திற்கு 60 நிமிடம் நடைபயிற்சி சென்றால் தசைகள் வலுப்பெறும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நடைபயிற்சி மட்டுமே செய்வதாக இருந்தால் வாரத்திற்கு 5 முறை 60 நிமிடம் நடைபயிற்சி செல்லுங்கள். உடல் எடையைக் குறைக்க இது கண்டிப்பாக உதவும். 60 நிமிட நடைபயிற்சி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நல்லது.

மேலும் படிங்கமார்பகங்கள் பெரிதாக இருப்பதால் அசெளகரியமா ? 7 நாட்களில் குறைத்திடலாம்

6 நிமிடங்களுக்கு வார்ம் அப்

நடைபயிற்சி செல்லும் முன்பாக 6 நிமிடம் வார்ம் அப் செய்யுங்கள். இது தசைகளுக்கும், கை கால் மூட்டுகளுக்கும் நல்லது. காயங்களை தவிர்க்கலாம். வார்ம் அப் செய்யும் போது உடலில் இரத்த ஓட்டம் சீரடையும்.

6 நிமிடங்களுக்கு அமைதி

நடைபயிற்சி சென்று வந்த பிறகு உங்களை அமைதிப்படுத்தி கொள்வது முக்கியம். வியர்வையை துடைக்கவும். இது உடலை நெகிழ்வு தன்மையுடன் வைக்கும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP