herzindagi
image

பத்தே நாளில் 10 கிலோ உடல் எடையை குறைக்க - நம்ம ஊரு சூப்பர் டயட் பிளான்-கட்டாயம் சமரசம் இருக்கக்கூடாது

உடல் எடையை எப்படியாவது  குறைக்க வேண்டும் என்று போராடும் நபரா நீங்கள்? உடல் எடையை குறைக்க உணவு முறை பழக்கவழக்கத்தை மாற்றி சிறிதளவு உடற்பயிற்சியை சேர்த்தாலே போதும் உடல் எடையை சூப்பராக குறைக்கலாம். 10 நாளில் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் டயட் பிளான்.
Editorial
Updated:- 2025-01-10, 00:07 IST

தற்போதைய நவீன காலத்தில் தவறான வாழ்க்கை முறை பழக்கவழக்கம் உணவு முறை பழக்கவழக்கத்தால் உடல் பருமனால் 30 வயது இளம்பெண் முதல் 60 வயது முதியவர் வரை பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக திருமணமான பெண்கள் 10 வயதில் 70 கிலோ வரை உடல் எடை அதிகரித்து விடுகிறார்கள். அதிலும் ஆண்கள் இரண்டு மாதத்திலேயே உடல் எடை மடமடவென உயரும் அளவிற்கு உடல் பருமன் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. உடல் எடையை கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவு முறை பழக்க வழக்கம் கட்டாயம் தேவை. குறிப்பாக தினமும் காலையிலிருந்து இரவு வரை நாம் என்னென்ன சாப்பிடுகிறோம்? அதை எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதை வகுத்து வைத்திருக்க வேண்டும்.

 

மேலும் படிக்க: 70 கிலோ எடையுள்ள பெண்கள் 10 நாளில் உடல் எடையை குறைக்க சீரகப் பொடியை இப்படி யூஸ் பண்ணுங்க


இடைவிடாமல் இந்த பத்து நாள் உணவு பழக்க வழக்க உடற்பயிற்சி குறிப்புகளை சமரசம் இல்லாமல் பின்பற்றினால் போதும், பத்தே நாட்களில் 10 கிலோ வரை உடல் எடையை தாராளமாக குறைக்கலாம். அதற்கு, உடல் எடையை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த சில முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.

உடல் எடையை குறைக்க பத்து நாட்கள் செய்ய வேண்டியவை

 

weight-loss-composition-with-tape-measure-tot-slate_926199-3050261

 

தினமும் காலை எழுந்தவுடன்

 

தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சிறிதளவு சுடுதண்ணீர் குடிக்கவும். டீ, காபி உள்ளிட்ட பானங்களுக்கு பதிலாக க்ரீன் டீயை குடிக்கவும். மிக முக்கியமாக காலை கட்டாயம் 6.00 மணிக்கு இதை செய்ய வேண்டும்.

 

காலை உணவு

 

hq720 (6)

 

  • 8 மணியிலிருந்து 9 மணிக்குள் காலை உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும்.
  • காலை உணவாக மூன்று இட்லி அல்லது 2 தோசை எடுத்துக் கொள்ளலாம்.
  • மாற்றாக ஓட்ஸ் கஞ்சி இரண்டு கிளாஸ் அளவிற்கு எடுத்துக் கொள்ளலாம்.

 

காலை ஸ்னாக்ஸ் நேரத்தில்

 431035-greentea-1

 

11 மணி அளவில் ஸ்னாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக சிறிதளவு வேர்க்கடலை சாப்பிட்டுக்கொண்டு மீண்டும் கிரீன் டீ எடுத்துக் கொள்ளலாம்.

மதிய உணவு

 

82338080_808948556243806_7349532991644762112_n

 

  • மதியம் மிகச் சரியாக 1:30 மணிக்கு பசியை  குறைக்கும் அளவிற்கு மிதமான அளவில் சோறு / சாதம் சாப்பிடலாம்.
  • அதனுடன் கீரை மற்றும் காய்கறிகள் இருந்தால் கூடுதல் சிறப்பு.
  • மாற்றாக சாம்பார் போன்ற குழம்புகளை எடுத்துக் கொள்ளலாம்.
  • மிக முக்கியமாக மதிய உணவை இரண்டு மணிக்குள் சாப்பிட வேண்டும்.

 


3 மணி அளவில்

 

  • பசி எடுக்கும் நேரத்தில் முடிந்த அளவு சிறிதளவு இஞ்சி கலந்த மோர் குடிக்கலாம்.
  • மாற்றாக பால் டீ குடித்துக் கொள்ளலாம்.

 

மாலை 5 மணிக்கு

 

மிகவும் பசி உணர்வாக இருந்தால் ஒரு கிளாஸ்-ல் பாதி அளவிற்கு பால் டீ குடித்துக் கொள்ளவும்.

 

இரவு உணவு

 

  • தூங்கச் செல்வதற்கு முன் சாப்பிடாமல் இரவு உணவை கட்டாயம் அதிகபட்சம் 8:30 மணிக்குள் சாப்பிட வேண்டும்.
  • இரண்டு சப்பாத்தி/இரண்டு தோசை அல்லது 4 இட்லி சாப்பிடலாம். 

தினமும் கட்டாய நடைபயிற்சி

 l-intro-1626268712

 

  • இது தவிர தினமும் ஒரு மணி நேரம் கட்டாயமாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும் இதில் சமரசம் இருக்கக் கூடாது.
  • காலை அல்லது மாலை என இரண்டு வேலைகளில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்து தினமும் கட்டாயம் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்ய வேண்டும்.


நடைப்பயிற்சிக்கு மாற்று வலிமை உடற்பயிற்சி


நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள் ஜிம்மிற்கு சென்று ஒரு மணி நேரம் லேசான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். ஜிம் நிபுணரோடு கலந்துரையாடி கொஞ்சம் கனமான உடற்பயிற்சி பொருட்களையும் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்யலாம்.

 

உடற்பயிற்சி, நடைப்பயிற்சிக்கு மாற்றாக


காலை அல்லது மாலை என இரண்டு வேளைகளில் உங்களால் உடற்பயிற்சியோ அல்லது நடை பயிற்சியோ செய்ய முடியவில்லை என்று நீங்கள் யோசித்தால் தியானம் அல்லது யோகா செய்ய வேண்டும்.

படுக்கச் செல்லும் முன்பு

 

காலையிலிருந்து இரவு வரை மேல் குறிப்பிட்டுள்ள குறிப்புகளை சமரசம் இல்லாமல் பின்பற்றி விட்டு, இரவு தூங்கச் செல்லும் போது சிறிதளவு நாட்டு சக்கரை கலந்த குடித்துவிட்டு உறங்கச் செல்லலாம்.


மிக முக்கிய குறிப்பு


இந்த பத்து நாள் உணவு குறிப்புகளை சமரசம் இல்லாமல் தினமும் பின்பற்றினால் பத்தே நாட்களில் தாராளமாக 10 கிலோ வரை உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்கலாம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

 

முடிந்தால் தினமும் தூங்கும் போது மறுநாள் நாளை கட்டாயம் இந்த உணவு முறை பழக்கவழக்கத்தையும், உடற்பயிற்சி செய்முறையையும் கட்டாயம் கடைபிடிப்போம் என்று நினைத்து தூங்கவும்.

மேலும் படிக்க: பிதுங்கும் தொப்பையை கரைத்து, பத்தே நாட்களில் தட்டையான வயிற்றை பெற 15 சிறப்பு குறிப்புகள்

 

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த  சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil

 

image source: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com