
பிரா அணிவதால் மார்பகங்கள் பார்ப்பதற்கு அழகாக தெரியும். ஆனால் நாம் பிரா தேர்வு செய்வதில், அதை அணியும் வகையில் பல தவறுகளை செய்கிறோம். அதன் காரணமாக பெண்கள் பல பிரச்சனைகளை வெளியில் சென்றால் நம் சமளிக்க வேண்டியதா இருக்கிறது. அதே சமையம் தவறான பிரா அணிந்தால் பெண்களுக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதை பார்க்காலம்.
நிறைய பெண்கள் தூங்கும் போது ப்ரா அணிவது மார்பகங்கள் தளர்வை தடுக்கும் என நினைக்கிறார்கள். மறுபுறம், நிறைய பெண்கள் ப்ராவைக் கட்டிக்கொண்டு தூங்குவது மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று நினைக்கிறார்கள். இருப்பினும், உண்மை என்னவென்றால் இந்த இரண்டு விஷயங்களும் ஒரு கட்டுக்கதை. ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு தொய்வு ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்றாலும், ப்ராக்கள் மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று நம்பத்தகுந்த ஆராய்ச்சி எதுவும் இல்லை. எனவே ப்ரா அணிவது அல்லது தூங்கும் போது அணியாமல் இருப்பது தனிப்பட்ட விருப்பம். இருப்பினும், நீங்கள் நிம்மதியாக தூங்குக ப்ரா அணியாமல் இருப்பது சிறந்தது.

வெள்ளை நிற ஆடை அணியும் போது அதே நிற பிரா அணிவதால் மற்ற எந்த நிறத்தையும் விட அதிகமாக தெரியும். வெள்ளை நிற ஆடையின் ப்ரா காட்டப்படுவதைத் தடுப்பதற்கான ஒரு எளிய ஹேக் உள்ளது, அது உங்கள் தோலின் நிறத்திற்கு நெருக்கமான நிற ப்ராவை அணிவது. சரும நிற ப்ரா உங்கள் தோலுடன் அழகாக கலந்து வெள்ளை ஆடைகளின் கீழ் மறைந்துவிடும்.
இந்த பதிவும் உதவலாம்: பிறப்புறுப்பு தொடர்பான இந்த கட்டுக்கதையை நம்பாதீர்கள்.. பெண்களே உஷார்!
ப்ராக்களை வாஷிங் மெஷினில் துவைத்தால் விரைவில் தேய்ந்துவிடும். பேட் செய்யப்பட்ட பிராக்கள் மற்றும் மென்மையான லேஸ் ப்ராக்கள் வாஷிங் மெஷினில் துவைத்தால் அவற்றின் வடிவத்தை மாற்றிவிடும். பொதுவாக ப்ராக்களை கையால் துவைப்பது அதன் பின் தொங்கவிட்டு காயவிடாமல் இயற்கையாக கீழ் உலர வைப்பது நல்லது. நீங்கள் வாஷிங் மெஷினில் ப்ராவைக் துவைக்க வேண்டியிருந்தால் முதலில் அவற்றின் நிறத்தின் அடிப்படையில் அவற்றைப் பிரித்து துவைக்கவும்.
நாம் அனைவரும் அழகான லேசி ப்ராக்களை விரும்புகிறோம், ஆனால் அவை அன்றாட உடைகளுக்கு சரியான தேர்வாக இருக்காது. ஒரு நாள் முழுவதும் லேசி ப்ராவை அணிவது நாள் முடிவில் உங்களுக்கு சங்கடமாக இருக்கும், குறிப்பாக கோடைக்காலமாக இருந்தால். தினந்தொரும் பயன்பாட்டிற்கு காட்டன் ப்ராக்களைப் அணிவது சிறந்தது.

பொருத்தமற்ற ப்ரா அணிவது நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாகும். நன்கு பொருத்தப்பட்ட ப்ராவின் சில அறிகுறிகள்:
இந்த பதிவும் உதவலாம்: மாச கணக்கில் பீரியட்ஸ் வரவில்லையா? நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த 3 பயிற்சிகளை செய்யுங்கள்!
நீங்கள் இப்போது பல ஆண்டுகளாக பிடித்த பிராவை அணிந்திருக்கிறீர்களா? அதை சரி பார்ப்பது அவசியம் உங்கள் ப்ராவை நன்றாக கவனித்துக்கொண்டாலும் உண்மையில் ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்காது. மேலும், நீங்கள் சரியான அளவில் அணிவதை உறுதிப்படுத்த ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ப்ராவின் அளவை சரிபார்க்க வேண்டும்.
இந்த கட்டுரையை உங்களுக்கு பிடித்திருந்தால் பகிர மறக்காதீர்கள். மேலும், கீழே உள்ள கருத்துப் பிரிவில் இந்த கட்டுரை பற்றிய உங்கள் கருத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். மேலும் இதுபோன்ற கதைகளைப் படிக்க herzindagi-யுடன் இணைந்திருங்கள்.
Image credits- freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com