
நம்முடைய சருமம் பொலிவாக தோன்றுவதற்கு ஆரோக்கியம் மற்றும் தொடர் பராமரிப்புகள் தேவைப்படும். இவற்றை சீராக கடைபிடிக்கும் போது நாம் விரும்பக் கூடிய சருமத்தின் தன்மையை மேம்படுத்தலாம்.
பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை எல்லோரும் விரும்புவோம். அதற்காக சிலர், பல விலை உயர்ந்த அழகுசாதன பொருள்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால், சில எளிய விஷயங்களில் கவனம் செலுத்தாமல் விட்டால், அதுவே சருமத்தின் வயதை அதிகரித்து, பொலிவைக் குறைத்து விடும். நாம் பெரும்பாலும் செய்யும் சரும பராமரிப்பு தவறுகள் குறித்து இப்பதிவில் காணலாம்.
சரும பராமரிப்பில் நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு சன்ஸ்கிரீனை பயன்படுத்தாமல் இருப்பது தான். சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்கள் (UV Radiation) சருமத்தில் படும்போது, அது சுருக்கங்கள், கருமையான புள்ளிகள் மற்றும் சருமத்தின் நெகிழ்வுத்தன்மை குறைவு ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது. எனவே, மேகமூட்டமான அல்லது குளிர்கால நாட்களாக இருந்தாலும் சரி, தினமும் சன்ஸ்கிரீனை பயன்படுத்துவதை கட்டாயமாக்குங்கள்.

மேலும் படிக்க: கருவளையங்களை போக்க சிம்பிள் தீர்வு; இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றலாம்
வறண்ட சருமம் பொலிவின்றி இருப்பது மட்டுமல்லாமல், வயதாகும் செயல்முறையை விரைவுபடுத்தவும் கூடும். தினமும் மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது, சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து, அதை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைக்க உதவுகிறது. இது சருமத்தின் அமைப்பை சீராக்குகிறது. இதனால் உங்கள் சரும வகைக்கு ஏற்ற நல்ல ஈரப்பதமூட்டும் லோஷனை தவறாமல் பயன்படுத்துங்கள்.
மேலும் படிக்க: சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டுமா? இந்த 5 பழக்கங்களை தினசரி கடைபிடிக்கவும்
மேக்கப்புடன் தூங்குவது உங்கள் சருமத்திற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறாகும். இது உங்கள் சரும துளைகளை அடைத்து, முகப்பருக்கள் மற்றும் மந்தமான தன்மைக்கு வழிவகுக்கும். மேலும், இது இரவில் சருமம் இயற்கையாகவே தன்னை சரிசெய்து கொள்ளும் செயல்முறையை தடுக்கிறது, இதனால் முதுமையான தோற்றம் வெளிப்படும். நீங்கள் எவ்வளவு சோர்வாக இருந்தாலும், தூங்குவதற்கு முன் மேக்கப்பை முழுமையாக நீக்குவதை ஒரு பழக்கமாக்குங்கள்.

அதிக இரசாயனங்கள் கொண்ட தயாரிப்புகளை பயன்படுத்துவது சருமத்திற்கு நீண்ட கால சேதத்தை ஏற்படுத்தும். இது உங்கள் சருமத்தின் இயற்கையான எண்ணெய்களை நீக்கி, வறட்சி மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கும். உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும் வகையில், லேசான, ஈரப்பதமூட்டும் தன்மை கொண்ட தயாரிப்புகளை தேர்வு செய்யவும்.
போதுமான தூக்கம் இல்லாத போது சருமம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். ஒவ்வொரு இரவும் குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் உறங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த காரணிகள் அனைத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் உங்கள் சருமத்தை ஆரோக்கியமான முறையில் பராமரிக்கலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com