vagina

Vaginal Myths: பிறப்புறுப்பு தொடர்பான இந்த கட்டுக்கதையை நம்பாதீர்கள்.. பெண்களே உஷார்!

பிறப்புறுப்பு தொடர்பான பல கட்டுக்கதைகள் உள்ளன அதைப் பற்றி பெண்களுக்குத் தெரியாது. இது போன்ற கதைகளுக்கான தீர்வினை பார்க்கலாம். 
Editorial
Updated:- 2023-06-14, 13:41 IST

பிறப்புறுப்பு தொடர்பான கட்டுக்கதைகளைப் பற்றி நாம் பேச ஆரம்பித்தால் அது எங்கு போய் முடிவடையும் என்பது புரியாது. பெண்கள் தங்கள் உடலைப் பற்றி தெரிந்து கொள்ள அதிக கவனம் செலுத்துவதில்லை. தனக்கு தெரிந்த நபர்களிடம் கேட்ட கூட அச்சப்படுவார்கள். பெண் பிறப்புறுப்பை பற்றி மருத்துவரிடம் பேசும்போது பல கட்டுக்கதைகளை உடைக்கிறது. இந்த 21ம் நூற்றாண்டில் கூட பெண்களால் கன்னித்தன்மை, பிறப்புறுப்பு போன்ற வார்த்தைகளை எளிதில் பயன்படுத்த முடிவதில்லை. இதற்குப் பின்னால் இருக்கும் தயக்கத்தை எல்ல பெண்களாலும் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் நம் நாட்டில் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி பேசுவது ஒரு தடையாகக் கருதப்படுகிறது.

இன்றும் கூட பல பெண்களால் தங்களின் உடல் பிரச்சனைகளை வெளிப்படையாகப் பேச முடிவதில்லை. மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் கரிமா ஸ்ரீவஸ்தவா எம்.டி (COGMR (UK))இது தொடர்பான தகவல்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவர் கன்னித்தன்மை மற்றும் பிறப்புறுப்பு தொடர்பான கட்டுக்கதைகளைப் பற்றி பேசியிருக்கிறார்.

இந்த பதிவும் உதவலாம்: மாதவிடாய் நாட்களில் கோபம் வருகிறதா? இவை தான் காரணம்! 

உடல் உறவால் பிறப்புறுப்பு தளர்ந்துவிடுமா?

இந்தக் கேள்வியைக் கூகுளில் தேடிப் பார்த்தால் முடிவுகளைக் கண்டு அதிர்ச்சியடைவீர்கள். கன்னித்தன்மை பற்றி கேட்கப்படும் பொதுவான கேள்விகளில் இதுவும் ஒன்றாகும். பிறப்புறுப்பு இரத்தபோக்கு பற்றிய தவறான கருத்துகள் அதிகம் பேசப்படுகிறது, அதன் உச்சக்கட்ட கேள்வியாக பெண்களிடம் நெகிழ்வுத்தன்மை பற்றிய கேள்விகள் எழுப்படுகிறது. டாக்டர் கரிமாவின் கூற்றுப்படி அப்படி எதுவும் இல்லை. பிறப்புறுப்பு ஊடுருவல் தற்காலிக நெகிழ்வுத்தன்மையை வழங்கலாம், அது பிறப்புறுப்பின் அளவை நிரந்தரமாக பாதிக்காது.

மீண்டும் மீண்டும் உடலுறவு கொள்வது அளவு அதிகரிக்குமா?

vagina inside

இதற்கும் இல்லை என்பதே பதிலாம், உடலுறவின் அதிர்வெண் கூட எந்த விளைவையும் ஏற்படுத்தாது. நீங்கள் முன்பு சுறுசுறுப்பான உடலுறவு வாழ்க்கையைக் கொண்டிருந்தால், இனி சுறுசுறுப்பாக இல்லாவிட்டால் பிறப்புறுப்பு திறப்பு தானாகவே சுருங்கிவிடும்.

பிறப்புறுப்பு தளர்வதற்கான காரணங்கள் என்ன?

டாக்டர் கரிமாவின் கூற்றுப்படி,பிறப்புறுப்பு நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்க இரண்டு விஷயங்கள் மட்டுமே உள்ளன. இது இயற்கையான பிரசவம் மற்றும் வயது காரணமாக உடலில் ஏற்படும் தளர்வு. மேலும் எந்த வகையான பாலியல் இன்பமும் இதில் வேலை செய்யாது.

பிறப்புறுப்பை சுத்தம் செய்யும் பொருட்கள் தேவையா?

இதைப் பற்றி மற்றொரு மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் அமீனா காலித்திடம் பேசினோம். பிறப்புறுப்பு தானே சுத்தம் செய்து கொள்ளும் எந்த வாசனை திரவியங்களும் பயன்படுத்தத் தேவையில்லை என்றும் சொல்கிறார்கள்.

நீங்கள் வெளிப்புற தண்ணீரில் சுத்தம் செய்யலாம் ஆனால் பிறப்புறுப்பு சுத்தம் தேவையில்லை. பிறப்புறுப்பு வாசனை திரவியம் கொண்ட பாடி வாஷ் மூலம் ஸ்க்ரப் செய்யப்பட தேவையில்லை. இந்த வகையான பொருட்களை பிறப்புறுப்பில் பயன்படுத்துவது நல்லதை விட தீங்கு விளைவிக்கும்.

ஈஸ்ட் தொற்று பூண்டு அல்லது தயிர் பயன்படுத்துவது சரியா? 

vagina inside

பிறப்புறுப்புக்கு வீட்டு வைத்தியம் பஞ்சமில்லை, ஆனால் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இவை அனைத்தும் அறிவியல் உண்மைகள் அல்ல. ஈஸ்ட் தொற்று மோசமான சுகாதாரம், பாக்டீரியா அல்லது மருந்தின் எதிர்வினை ஆகியவற்றால் ஏற்படலாம். இதற்கு மருத்துவரை அணுக வேண்டும்.

வெளியேற்றம் மோசமாக உள்ளது

இந்த பதிவும் உதவலாம்:  மாதவிடாய் காலத்தில் வலியுடன் இந்த கஷ்டமா? இனி அந்த கவலை வேண்டாம்

இதுவும் ஒரு பெரிய கட்டுக்கதை. பிறப்புறுப்பு தொற்று எப்போதும் மோசமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இது கிட்டத்தட்ட எல்லா பெண்களுக்கும் நடக்கும். இது மாதவிடாய்க்கு முன் அல்லது பின் நடப்பது சரியானது. சிலருக்குக் குறைவாகவும் சிலருக்கு அதிகமாகவும் இருக்கும் சிலருக்கு வெளியேற்றம் துர்நாற்றம் வீசலாம், அதன் நிறம் வழக்கமானதாக இருந்தால், பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட்டால்  ஒருமுறை மருத்துவரை அணுகலாம்

எங்கள் கட்டுரை தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால் கட்டுரைக்கு கீழே உள்ள கருத்து பெட்டியில் எங்களுக்குத் தெரிவிக்கலாம். உங்களுக்கு சரியான தகவலை வழங்க நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம். இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால், பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளை படிக்க Harzindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image credits- freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com