தமிழர்களின் பண்பாட்டை உலகறிய செய்யும் பண்டிகைகளில் முக்கியமானது தை திருநாள். மார்கழி 30 போகிப் பண்டிகையிலிருந்து தை திருநாளுக்கான கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். தை முதல் நாள் தை பொங்கல், இரண்டாம் நாள் மாட்டு பொங்கல், தை மூன்றாம் நாள் காணும் பொங்கல் என தொடர்ந்து நான்கு நாட்களும் கொண்டாட்டத்திற்கு பஞ்சமே இருக்காது. இந்த பண்டிகையில் பொங்கல் வைப்பது சிறப்பானது என்றாலும், வாசல் முன்னதாக கோலம் போடுவது தனி சிறப்பாகவும் தமிழர்களின் பராம்பரிய பழக்கங்களில் ஒன்றாகவும் உள்ளது. தை திருநாளில் வாசலின் முன்னதாக கோலமிடுவதைப் பெருமையாக கருதுகின்றனர் பெண்கள்.
மேலும் படிங்க: தமிழர்களின் உறவுகளை வலுப்படுத்தும் பொங்கல் சீர்வரிசை!
ஏன் கோலமிடுகிறோம்?
சுப நிகழ்ச்சிகளின் அடையாளம் கோலங்கள் என்பதால் வீட்டு வாசல்களில் அனைத்து நாள்களிலும் கோலம் போடும் பழக்கத்தை நாம் கொண்டுள்ளோம். குறிப்பாக மார்கழி மாதத்தில் எவ்வித சுப நிகழ்ச்சிகள் நடைபெறாத என்றாலும், இந்த மாதத்தில் 30 நாள்கள் கோலமிடுவதால் தை மாதம் சிறப்பானதாக அமையக்கூடும் என்ற நம்பிக்கை நம்முடைய முன்னோர்களிடம் அதிகளவில் இருந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப தை மகளை வாசல்களில் வண்ணக் கோலமிட்டு பெண்கள் வரவேற்கின்றனர். பெரும்பாலான கிராமங்களில் தற்போதும் சுண்ணாம்பு கொண்டு வீட்டின் திண்ணை மற்றும் பூஜை அறைகளில் கோலமிடுகின்றனர். மேலும் வீட்டு வாசலில் விதவிதமான கோலங்கள் போட்டு அதை அழகுப்படுத்துவதற்காக பல வண்ணங்களையும் தீட்டுகின்றனர்.
இவ்வாறு வாசலில் போடும் வண்ண கோலங்கள் மேல் வைத்து மகிழ்ச்சியோடு பொங்கல் வைக்கின்றனர். கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும் கோலங்கள் போடும் பழக்கம் உள்ளது. என்ன நவீன காலத்திற்கு ஏற்ப ஸ்டிக்கர் கோலங்களை போட்டு கொள்கின்றனர். ஆனால் என்ன? கிராமமாக இருந்தாலும்? நகரமாக இருந்தாலும் கோலங்கள் போடுவது என்பது கலாச்சாரங்களில் ஒன்றாகி விட்டது.
பொங்கலில் அதிகமாக போடும் கோலங்கள்:
முன்பெல்லாம் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் முதல் பெண்கள் வரை பொங்கல் வந்துவிட்டாலே என்ன கோலங்கள் போடலாம் என தோழிகளிடம் கேட்டு பழகிக் கொள்வார்கள். அவற்றில் சில முக்கியமான கோலங்களை நினைவு கூர்வோம்.
- பொங்கல் பானை கோலம்: பொங்கல் வந்துவிட்டாலே அனைவரது வீடுகளிலும் பொங்கல் பானை கோலங்கள் தான் அதிகளவில் இடம் பெறும். இரண்டு புறம் கரும்புகளோடு நடுவில் பொங்கல் பொங்குவது போன்று போடப்படும் கோலங்களைப் பார்க்கும் போதே மகிழ்ச்சி தானாக பொங்கும்.
- மாட்டு பொங்கல் கோலம்: தை பொங்கல் தினத்தில் எப்படி பொங்கல் பானை கோலங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததோ? அதே போன்று மாட்டு பொங்கலில் பலரது வீட்டு வாசல்களில் மாடுகளின் கொம்புகள் மற்றும் மாடுகளைப் போன்ற முகம் கொண்டு கோலங்கள் போடப்படும்.
- ரங்கோலி கோலம்: பானை கோலம் எப்படி சிறப்பு வாய்ந்தது? அப்படி தான் ரங்கோலி கோலங்களும். தங்களிடம் உள்ள வித்தியாசமான ஐடியாக்களைக் கொண்டு வரையப்படும் ரங்கோலி கோலங்கள் போடப்படுகிறது. அதிலும் இதற்கு கலர் சேர்க்கும் போது அவ்வளவு அழகாக நமது கண்களுக்கு விருந்தளிக்கும்.
- சிக்கு கோலங்கள்: நம்முடைய பாட்டிக் காலத்தில் சிக்கு கோலங்கள் தான் அதிகளவில் இடம் பெறும். 30 புள்ளிகளைக் கொண்டு கூட இந்த கோலங்களைப் போடுவார்கள். குறிப்பாக சிக்கு கோலங்கள் போடுவதே வாழ்க்கையை எப்படி அழகாக எதிர்கொள்கிறார்கள்? என்பதை இக்கோலங்கள் அழகாக வெளிப்படுத்தும் வகையில் அமையும்.
இதே போன்று ஜல்லிக்கட்டு மாடுகள், பானையில் பொங்கல் பொங்குவது, விளக்குகள் மற்றும் பானைகளின் கூட கோலங்கள் என பல வண்ண மயமான கோலங்கள் இடம் பெறும். இதோடு தை மகளே வருக, இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள், ஹேப்பி பொங்கல் 2024 என்பது போன்ற பல வாழ்த்துக்களும் உங்களது கோலங்களில் இடம் பெற்றிருக்கும்.
மேலும் படிங்க: தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டும் அதன் சுவாரஸ்சிய வரலாறும்!
சுப நிகழ்ச்சிகளின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் கோலங்கள் தான் பொங்கல் திருநாளையொட்டி நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கூட கோல போட்டிகள் பிரதான இடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation