தமிழர்களின் பண்பாடும், கலாச்சாரம் காலத்திற்கு அழியாது என்பதற்கு சான்றாக நிலைத்து நிற்கிறது தை திருநாள். இயற்கைக்கும், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றியைத் தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் தை பொங்கலில் பல சிறப்புகள் அடங்கியுள்ளது. தை பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ந்து 3 நாள்கள் கொண்டாடும் இந்த பண்டிகையில் முக்கியமானது பொங்கல் சீர்வரிசை.
ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்கள் தான் லட்சுமியின் மறு உருவம். திருமணத்திற்கு முன்னதாக தாய் வீட்டில் அவர்கள் தான் அனைத்துமே. ஆனால் திருமணத்திற்கு பின்னதாக வேறு வீட்டிற்கு செல்லும் தனது மகள் மற்றும் சகோதரிகளுடன் எப்போதுமே பந்தம் நீடிக்க வேண்டும் என்பதற்காக தொடங்கியது தான் பொங்கல் சீர்வரிசை. தாய் வழி உறவில் மேற்கொள்ளும் சம்பிரதாயங்களில் பொங்கல் சீர்வரிசை மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் படிங்க: தை பொங்கலும் அதன் சுவாரஸ்சிய வரலாறும்!
தாய் வீட்டு பொங்கல் சீர்:
திருமணம் முடிந்த பின்னதாக வரக்கூடிய முதல் பொங்கல் திருநாளுக்கு பெண் வீட்டார் மிகவும் விமர்சியாக பொங்கல் சீர் கொடுக்கும் வழக்கம் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் ஊரே மெச்சும் அளவிற்கு தங்களது உடன் பிறப்புகளுக்கு சகோதர்கள் சீர் செய்வார்கள்.
தலைப்பொங்கல் என்பது தலை தீபாவளியைப் போன்றது. எப்படி தல தீபாவளிக்கு பெண் வீட்டார்கள் தங்களது மாப்பிள்ளை மற்றும் பெண்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் தேவைப்படக்கூடிய வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கி கொடுக்கிறார்களோ? அதே போன்று தான் பொங்கல் பண்டிகைக்கும். தாய்வீட்டு வழி உறவு வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும் என்பதற்காக பொங்கல் சீர் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இந்த சீர்வரிசையில் பொங்கல் வைப்பதற்காக பித்தளை பானைகள், பித்தனை கரண்டி, பச்சரிசி, மண்டவெல்லம், உலர் திராட்சை, நெய் உள்ளிட்ட அனைத்து வகையான காய் கறிகளையும் புத்தாடைகளையும் சீர் கொடுப்பார்கள். வசதிக்கு ஏற்றவாறு தங்கத்தில் மோதிரம், செயின் அல்லது வீட்டு உபயோகப் பொருட்களையும் கொடுப்பது பழக்கம்.
மேலும் மஞ்சள் குலை, கரும்புக்கட்டு போன்றவற்றையும் சொந்த பந்தங்கள் சூழ கொண்டு பெண் வீட்டார்கள் சீர் கொண்டு செல்வார்கள். தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கூறிய பொருள்களோ பனை வெல்லம், பனங்கிழங்கு கட்டுகள் போன்றவற்றையும் சீராக கொடுக்கும் பழக்கம் உள்ளது. சில இடங்களில் புதுமண தம்பதிக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு பொங்கலுக்கு சீர் வரிசை கொடுக்கும் பழக்கம் உள்ளது. பொங்கலுக்கு பதினைந்து, ஒன்பது, ஏழு என அவர்களுக்கு அவர்களுக்கு வசதியான ஒற்றைப்படை நாளில், சொந்த பந்தங்களுடன் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று சீர் செய்வார்கள். பழங்காலத்தில் இருந்தே இந்த சீர் கொடுக்கும் நடைமுறையில் இருந்து வருகிறது.
வாழ்வியல் சூழல் மாறினாலும், நவீன காலத்திலும் தமிழர்களின் உறவு மற்றும் பண்பாட்டை தலைநிமிரச் செய்கிறது பொங்கல் சீர்வரிசை என்றால் அது மிகையாகாது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation