herzindagi
image

Trending Pavadai Sattai Collection: பெண் குழந்தைகளுக்கு தனித்துவமான வடிவமைப்புகளில் லேட்டஸ்ட் பட்டு பாவாடை சட்டை கலக்‌ஷன்

பட்டு பாவாடை என்பது பெண் குழந்தைகள் அணியும் பாரம்பரிய தென்னிந்திய ஆடையாகும், இது சிறப்பு சந்தர்ப்பங்கள் மற்றும் பண்டிகைகளுக்குப் பிரபலமான தேர்வாகும். புது ஸ்டைலுடன் வந்திருக்கும் பாவாடை சட்டைகளைப் பார்க்கலாம். 
Editorial
Updated:- 2024-10-25, 13:56 IST

பண்டிகை நாட்கள் தொடங்கி விட்டது, சந்தைக்குச் சென்று விதவிதமான ஆடைகளை வாங்கி அணியும் வேலையும் வந்துவிட்டது. நமக்கு புது ஆடைகளை வாங்கி அணிய ஆசைகொள்வதை விட, நமது குழந்தைகளுக்கு புதிய ஆடைகளை வாங்கி அணிந்து பார்க்க ஆசைப்படுகிறோம். வீடுகளில் பண்டிகை நாட்களை கொண்டாடுவதில் மிக முக்கிய பங்கு நமது குழந்தைகளின் மகிழ்ச்சியைப் பார்க்கவே. இந்த நாட்களில் குழந்தைகளுக்கு விதவிதமான ஆடைகள் சந்தைகளில் விற்கப்படுகிறது. குறிப்பாக பெண் பிள்ளைகளுக்குச் சொல்லவே வேண்டாம், எண்ண முடியாத அளவிற்குக் கடைகளில்  ஆடைகளைப் பார்க்கலாம். குறிப்பாக நமது பாரம்பரிய ஆடைகளில் பட்டு பாவாடை சட்டைகள் புது டிசைன்களில் விற்கப்படுகிறது. 

 

மேலும் படிக்க: வெள்ளை கற்கள் பதித்த அழகாக லேட்டஸ்ட் ஜிமிக்கி கம்மல் கலெக்ஷன்

குழந்தைகளின் பாவாடை சட்டை தென்னிந்தியாவில் பாரம்பரிய உடையாகும். பல விதமான வண்ணங்களின் தனித்துவமான கலவை கொண்டு வடிவமைக்கப்படுகிறது. உண்மையில், ஒரு திருமணமானது கொண்டாடப்பட வேண்டிய மறக்கமுடியாத மற்றும் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாகும். ஒவ்வொருவரின் அதேபோல் மனதிலும் ஒரு தனித்தன்மை கொடுக்கும். உங்கள் பெண் குழந்தைக்குப் பாரம்பரிய உடை வாங்க முடிவு செய்தால். குழந்தைகளுக்குப் பாரம்பரிய உடையான பட்டு பாவாடை, அழகுபடுத்தப்பட்ட லெஹெங்காக்களுடன் வருகின்றன. தீபாவளி பண்டிகையோட்டி புதுவிதமான வந்து இருக்கும் சில பட்டு பாவாடை சட்டைகளை பார்க்கலாம்.

 

ஆரஞ்சு மற்றும் பச்சை நிற ஆடை

pattu kids

 

பெரிய ஆரஞ்சு நிற பார்டர் கொண்டு பச்சை நிற பட்டு துணியில் தங்க நிற ஜரிகை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேல் சட்டை பஃப் வைத்த கை கொண்டு தங்க பார்டர் கொண்டு குழந்தைகள் அணிய எளிதாக அமைக்கப்பட்டுள்ளது. சட்டையின் மையப்பகுதியில் பச்சை மற்றும் வெள்ளை நிற நூலை கொண்டு பெரிய மற்றும் சிறிய எம்ராய்டிங் பூக்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கும். அதனுடன் கோல்டன் நிற
எம்ராய்டிங் இலைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

சிவப்பு மற்றும் நீல நிற பாவாடை சட்டை

pattu kids 1

 

சிவப்பு நிறத்தில் மேல் சட்டையும், நீல நிறத்தில் கீழ் பாவாடை கொண்ட இந்த துணி குழந்தைகள் அணிந்தால் அவ்வளவு அழகாக இருக்கும். சிவப்பு மேல் சட்டை கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் ஆரி ஒர்க் டிசைன், சிறிய தங்க நிற மணிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கும். குட்டிஸ் பாவாடை நில நிறத்தில் சிறிய சிவப்பு பொட்டுகள் போல் கொடுக்கப்பட்டு அமைக்கப்பட்டு இருக்கும். இந்த நிற பாவாடை தீபாவளிக்கு சிறந்த கலக்சனாக இருக்கும்.

 

பஞ்சு மிட்டாய் கலர் பாவாடை சட்டை

pattu kids 2

 

பஞ்சு மிட்டாய் கலர் பாவாடை சட்டை பழைய கலந்து வடிவமைப்பு என்றாலும், நவீன வேலைப்பாடுகள் கொண்டு புதுவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேல் சட்டை பால் பச்சை நிறத்திலும், அதில் பிங்க் நிற கற்கள் பதித்து, அதை சுற்றி வெள்ளை நிற மணிகளை கோர்த்து நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருக்கும். கீழ் பாவாடையில் தங்க நிற இலைகள் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதன் கீழ் பகுதியில் பெரிய ஜரிகை கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

சிவப்பு நிற பிராண்டட் பாவாடை

pattu kids 3

 

இந்த சிவப்பு நிற பாவாடை சட்டை மிக பிரம்மாண்ட முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆடை பார்க்க இரண்டு நிற தோற்றம் தெரிவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊத நிற பிராண்டட் இலைகள் கொடுத்து இந்த ஆடைக்கு மேல் அழகு சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

மெரூன் நிற பாவாடை சட்டை

pattu kids 4

 

குங்கும நிற பிராண்டட் பாவாடை சட்டை கண்களுக்கு விருந்தளிப்பதாக இருக்கிறது. இலை, பூ, மற்றும் சுற்றுயும் கொடிகள் கொண்ட பிராண்டட் பாவாடை , ஒரு முழுமையை தரக்கூடியதாக இருக்கிறது. பாவாடை மற்றும் சாட்டை மையப்பகுதியில் கோமாதா வடிவத்தை கொடுத்து ஆடைக்கும் மெலும் அழகு சேர்த்திருக்கும்.

 

மேலும் படிக்க: வண்ணமயமான தீபாவளியைக் கொண்டாட சூப்பரான டிசைனர் புடவைகள்


இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com