சேலை என்பது இந்தியாவின் காலச்சார உடைகளாக அணியக்கூடியது. பல நூற்றாண்டுகளாக அணிந்து வரும் டிசைனர் புடவைகள் பண்டிகைக்கு புதுப்புது வடிவங்களில் உருவாக்கப்படுகிறது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது, மக்களுக்கும், கண்களுக்கும் குளிர்ச்சி அளிக்கும் வகைகளில் புது வடிவ உடைகள் கடைகளில் விற்க்கப்படிகிறது. பெண்கள் அணியக்கூடிய ஆசைகளில் டிசைனர் புடவைகள் சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் பிரபலமாகி வருகின்றன, ஏனெனில் அவை பாரம்பரிய புடவையில் மிகவும் நவீனமான மற்றும் ஸ்டைலான தோற்றத்தை வழங்குகின்றன. கடைகளுக்குச் சென்று புடவைகளைத் தேர்வு செய்யும் பொழுது எளிதில் அணியக்கூடிய புடவைகளைத் தேர்வு செய்வார்கள். பண்டிகை காலங்களில் அனியும் புடவை அழகாகவும், அணிவதில் எளிதாகவும் இருக்கும் புடவைகளைத் தேர்வு செய்யும் பெண்களுக்காக வந்திருக்கும் இந்த ஆண்டுக்காக புது டிசைனர் புடவைகளைப் பார்க்கலாம்.
மேலும் படிக்க: தீபாவளி கூட்டத்துல சிக்காமல் பராம்பரிய புடவைகள் வாங்கணும்னா சின்னாளப்பட்டிக்கு விசிட் அடிங்க!
இந்த பீச் நிற பர்பிள் கலர் அனைத்து வகையான ஆடை வடிவமைப்புக்கும் ஏற்ற நிறமாக இருக்கிறது. இந்த நிறத்தில் ஒரு அழகிய டிசைனர் புடவை கட்டினால் அனைவரின் கண்களும் உங்களை சுற்றியே இருக்கும். இது ஒரு நெட்டட் புடவை வகையை சார்ந்தது. புடவை முழுவதும் வெள்ளை மணிகளைக் கோர்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புடவையில் பட்டர்களில் நேர்த்தியான கை வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புடவையில் வெள்ளை நிற மணிகள், ஊதா நிற நூல்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அணிந்தால் பிரம்மாண்ட தோற்றத்தைக் கொடுக்கும்.
இந்த சிவப்பு நிற புடவையை கட்டினால் அனைவரும் உங்களை வச்ச கண்ணு வாங்காமல் பார்ப்பார்கள். புடவை முழுவதும் பொட்டு போல் புள்ளிகள் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பாட்டர்களில் முழு மரத்தின் வடிவமைப்பைக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புடவை முழுவதும் பார்க்க ஒரு பிரமாண்ட லூக்கை தரக்கூடியது.
இந்த புடவை பார்க்க மட்டுமல்ல அணிதல் மிக அழகாய் தோற்றத்தைத் தரக்கூடியது. புடவை முழுவதும் பல வேலைப்பாடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புடவை கட்ட மிகவும் எளிதாக இருக்கும். தூய ஆடம்பரத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த சிவப்பு நிற புடவை அதிநவீனத்தைத் தழுவி அமைக்கப்பட்டுள்ளது. நேர்த்தியாக எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ராஜ நேர்த்தியின் தொடுகையைச் சேர்க்கின்றன, அதே நேரத்தில் சிதறிய சீக்வின்கள் பளபளப்பாகவும் வசீகரத்தைத் தரக்கூடியது. இந்த பிரமிக்க வைக்கும் கலை வடிவம் கொண்ட புடவை எந்த நிகழ்வுக்கும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துங்கள். இந்த தீபாவளி இந்த புடவை சிறந்த தேர்வாக இருக்கும்.
இந்த நேர்த்தியான கைத்தறி டஸ்ஸார் புடவை நுணுக்கமான கவனத்துடன் கைவினை நேர்த்தியை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புடவை டிஜிட்டல் முறையில் அச்சிடப்பட்ட வடிவமைப்பு இந்த பாரம்பரிய துண்டுக்கு ஒரு நவீன தொடுதலைச் சேர்க்கிறது, அதே நேரத்தில் மென்மையான மற்றும் மெல்லிய துணி அணிவதற்கு வசதியாக இருக்கும். ஸ்மார்ட் மற்றும் சமகால புடவையை விரும்புவோருக்குச் சரியான தேர்வாக இருக்கும்.
சிக்கலான சீக்வின்ஸ் மற்றும் டோரி வேலைப்பாடுகளைக் கொண்ட இந்த நில நிற புடவை பார்க்க அழகான தோற்றத்தைத் தரக்கூடியது. கட்வொர்க் பார்டர் கொண்ட நீல நிற சேலை அணிய மிகவும் எளிதாக இருக்கும். இந்த தீபாவளிக்கு இந்த புதுவிதமான புடவைகளை அணிந்து மனம் மகிழக் கொண்டாடவும்.
மேலும் படிக்க: காஞ்சிபுரம் முதல் ஆர்கன்சா வரை; தீபாவளிக்கு டிரெண்டிங் பட்டுப்புடவைகள் இவை தான்!
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com