herzindagi
image

Diwali Jimikki Collection: வெள்ளை கற்கள் பதித்த அழகாக லேட்டஸ்ட் ஜிமிக்கி கம்மல் கலெக்ஷன்

அனைத்து விதமாக உடைகளுக்கு அணியக்கூடிய லேட்டஸ்ட் வெள்ளைக் கல் பதித்த ஜிமிக்கி கம்மலை இந்த தீபாவளிக்கு அணிந்து உங்கள் அழகை மேலும் அழகு கூட்டுங்கள் 
Editorial
Updated:- 2024-10-23, 23:40 IST

ஆடைகளுக்கு ஏற்றவாறு கம்மல் அணிவது நமக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக விசேஷ காலங்களில் ஜிமிக்கி கம்மல் அணிவது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். புடவை மற்றும் சுடிதார் உடைகளுக்கு ஏற்ற ஜிமிக்கி கம்மல் போடுவது ஒரு தணி அழகைக் கொடுக்கும். அப்படி தேர்வு செய்ய கடினமாக இருக்கும் நபர்கள் பொதுவான வெள்ளைக் கல் பதித்த ஜிமிக்கி கம்மலை அணிவார்கள். இந்த வெள்ள கல் பதித்த ஜிமிக்கி அனைத்து வித ஆடைகளுக்குப் பொருந்தும். லேட்டஸ்ட் ஜிமிக்கி கம்மலை இந்த தீபாவளிக்கு அணிந்து உங்கள் அழகுக்கு மேலும் அழகு செருங்கள். ஐந்து விதமாக ஜிமிக்கி கம்மல் டிசைன் பார்க்கலாம். 

மயில் முகம் ஜிமிக்கி கம்மல்

jimmka

 

மேலும் படிக்க: வண்ணமயமான தீபாவளியைக் கொண்டாட சூப்பரான டிசைனர் புடவைகள்

 

நுணுக்கமாக வேலைப்பாடுகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த ஜிமிக்கி கம்மல் புடவைகளுக்கும், சுடிதார் அணிந்தால் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். மயில் முகம் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த ஜிமிக்கி சிறுசிறு வெள்ளை கற்கலை நுணுக்கமான முறையில் பதித்து அமைக்கப்பட்டுள்ளது. ஜிமிக்கியின் நடுப்பகுதியில் பச்சைக் கற்கள் கம்மலின் தனித்துவத்தைக் காட்டுகிறது. மயில் முகத்தின் பின் பகுதியில் இலைகள் வடிவத்தில் மயில் இறகு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்மல் தீபாவளிக்குச் சிறந்த தேர்வாக இருக்கும்.

 

ரோஸ் கோல்டு ஜிமிக்கி

jimmka 1

 

புடவைகளுக்குச் சிறந்த தேர்வாக அமையும் வடிவில் இந்த ரோஸ் கோல்டு ஜிமிக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான புடவைகளுக்கும் அணியும் விதமாக இந்த கம்மல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

மூன்றடுக்கு ஜிமிக்கி

jimmka 4

 

இந்த புதுவிதமான ஜிமிக்கி பார்க்க மட்டுமல்ல அணிந்தாலும் அவ்வளவு அழகாக இருக்கும். வெள்ளை கற்கள் பதித்த வட்ட வடிவத்தின் மையப்பகுதியில் மயில் வடிவம் அமைக்கப்பட்டு, அதனுடன் இணைத்து கீழ் பகுதியிலும் வட்ட வடிவம் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த கீழ் பகுதி வட்ட வடிவத்தில் மூன்று ஜிமிக்கி அமைக்கப்பட்டு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புது வகையான ஜிமிக்கி கம்மல் அனைத்து விதமாக ஆடைகளுக்கும் அணியலாம். மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மயிலின் இறகில் பச்சை கற்களும், கண்களில் சிவப்புக் கற்களும் பதித்து புதுவிதமான வடிவமைத்துள்ளனர்.

நான்கு அடுக்கு ஜிமிக்கி

jimmka 5

 

இந்த புதுவிதமான ஜிமிக்கி மேல் கிளை நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த நட்சத்திர வடிவை ஒட்டி கொடை வடிவில் பெரிய ஜிமிக்கி வடிவமைக்கப்பட்டு இருக்கும். இந்த கொடை வடிவ ஜிமிக்கிமேல் இரண்டு அடுக்கு ஜிமிக்கிகளாக நான்கு ஜிமிக்கி பொருந்தப்பட்டு இருக்கும். அனைத்து விதமான ஆடைகளுக்கும் இந்த ஜிமிக்கி கம்மலை அணிந்துகொள்ளலாம்.

 

மேலும் படிக்க: தீபாவளி கூட்டத்துல சிக்காமல் பராம்பரிய புடவைகள் வாங்கணும்னா சின்னாளப்பட்டிக்கு விசிட் அடிங்க!

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com