உணவில் சுவையை அதிகரிக்க நாம் உப்பை தேவையான அளவு பயன்படுத்துகிறோம். உப்பு இல்லாத உணவு சாப்பிடுவதற்கு நன்றாக இருக்காது. உணவில் எந்த மசாலாவோ, சுவையூட்டியோ சேர்க்கும் போது கிடைக்காத சுவை கொஞ்சமாக உப்பு போடும் போது கிடைக்கும். உணவின் சுவை உப்பு அளவை பொறுத்தே இருக்கிறது. உப்பின் பயன்பாடு சமையலறையோடு நின்றுவிடுவதில்லை. பல வீட்டு வேலைகளுக்கு உப்பை உபயோகப்படுத்தலாம். உப்பை எந்ததெந்த வீட்டு வேலைக்கு பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தோட்டக்கலையில் உப்பு பயன்பாடு
வீட்டில் செடி வளர்ப்பு, தோட்டம் வைத்து பராமரிப்பதில் நீங்கள் ஆர்வமுள்ள நபராக இருந்தால் உப்பு உங்களுக்கு பல வழிகளில் பயன்படும். தோட்டத்தில் உப்பு பயன்படுத்துவது எதற்காக ?
- ஒரு லிட்டர் தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து கலக்கவும்.
- அந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும்.
- செடிகள் உட்பட இதர தாவரங்களின் இலைகள் மற்றும் வேர்களில் வாரத்திற்கு ஒரு முறை தெளிக்கலாம்.
- உப்புத் தண்ணீர் எறும்புகள், பூச்சிகள் மற்றும் பூஞ்சை தொற்றுகளை தாவரங்களில் இருந்து விலக்கி வைக்க உதவுகிறது. சில சமயங்களில் பூக்கள் வாடுவதையும் தடுக்கும்.
துணி கறைகளை நீக்க உப்பு
சமையலறையில் வேலை செய்யும் போது அல்லது சாப்பிடும் போது உங்கள் துணிகளில் எண்ணெய் போன்ற கறைகள் படிவது சகஜம். துணியில் ஒட்டிய சில விடாப்பிடியான கறைகளை அகற்றுவது கடினமாக இருக்கலாம். உங்களிடம் உப்பு இருந்தால் துணி கறைகளை பற்றிய கவலை தேவையில்லை.
- கறை படிந்த இடத்தில் உப்பு மற்றும் சமையல் சோடாவை கலந்து தடவவும்.
- சிறிது நேரம் அப்படியே ஊறவிடுங்கள்.
- வழக்கம் போல் துணியை துவைத்தால் கறை இருந்த அடையாளமே தெரியாது.
எறும்புகள், பூச்சிகளை விரட்டும் உப்பு
வீட்டில் உணவுப் பொருள் கொஞ்சம் கீழே கொட்டியிருந்தாலும் அந்த இடத்திற்கு எறும்புகள் படையெடுக்கும், பூச்சிகள் மொய்க்கும். சமையலறை பகுதியில் உப்பு தூவினால் போதும். உப்பு இருக்கும் இடத்தில் எறும்புகள், பூச்சிகள் சுற்றாது. உணவில் பூச்சி, புழு தாக்குதலை தவிர்க்கலாம்.
மேலும் படிங்க துர்நாற்றம் வீசும் ஹெல்மெட்டை ( தலைக்கவசம் ) சுத்தம் செய்து நறுமணக்க உதவும் குறிப்புகள்
வெள்ளி கொலுசு, பித்தளை பாத்திரங்கள் மற்றும் சில உலோகப் பொருட்கள் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தும் போது கருப்பு நிறத்தில் மாறும். உப்பை அவற்றின் மீது பயன்படுத்தும் போது அந்த பொருட்களின் பளபளப்பை மீட்டெடுக்க முடியும். கறை படிந்த இடத்தில் உப்பு தடவி பல் துலக்கி கொண்டு தேய்த்து எடுக்கவும். கழுவி வெயிலில் காய வைத்து பாருங்கள் அந்த பொருட்கள் பளபளப்பாக தெரியும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation