herzindagi
super foods for motherhood

Superfoods for Motherhood : தாயான பிறகு ஒவ்வொரு பெண்ணும் சாப்பிட வேண்டிய 3 உணவுகள் !

தாயான பிறகு, குழந்தை பராமரிப்பில் முழுமையாக ஈடுபடுவதால் பெண்கள் பலவீனம் அடைகிறார்கள். தாய்மார்களின் ஆற்றலை அதிகரிக்க கூடிய 3 சூப்பர் உணவுகளை இன்றைய பதிவில் பார்க்கலாம்...
Editorial
Updated:- 2023-07-09, 17:34 IST

கர்ப்ப காலத்தில், பெண்கள் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு சத்தான உணவுகளை சாப்பிடுகிறார்கள். ஆனால் பிரசவத்திற்கு பிறகு புதிதாக பிறந்த குழந்தையின் மீது அவர்களின் முழு கவனமும் இருக்கும். இதனால் தங்களுடைய ஆரோக்கியத்தை புறக்கணிக்க தொடங்குகிறார்கள். இதனால் தசை வலி, பலவீனமான கண்கள், முடி உதிர்தல் பல போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

இவ்வாறு சத்தமும் உணவுகளை எடுத்துக் கொள்ளாத நிலையில் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி தாய்ப்பாலின் உற்பத்தியும் குறைகிறது இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க பிரசவத்திற்கு பிறகு ஒவ்வொரு பெண்ணும் இந்த மூன்று உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது குறித்த தகவல்களை தாய் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிபுணரான  டாக்டர் ரமிதா கவுர் அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.

 

இந்த பதிவும் உதவலாம்: மலச்சிக்கல் நீங்கி வயிறு சுத்தமாக இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்!

 

பிரசவித்த தாய்மார்களுக்கு உணவு 

நிபுணரின் கருத்துப்படி பிரசவத்திற்கு பிறகு குழந்தையை கவனித்துக் கொள்வதை போலவே ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். பிரசவத்திற்குப் பிறகு ஏற்படக்கூடிய அதிக இரத்தப்போக்கால் தசைகள் வலுவிழக்கலாம். மேலும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் நிலையில் உடலிலும் ஊட்டச்சத்தை குறைபாடு ஏற்படலாம். இதனால் உடல் பலவீனமடையும். இதை தவிர்க்க பின்வரும் மூன்று உணவுகளையும் உங்கள் அன்றாட உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

முருங்கை கீரை 

moringa for women after delivery

இதில் வைட்டமின் A, B, C, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் புரோட்டின் நிறைந்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு பெண்கள் ஆரோக்கியமாக இருக்கவும், தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்தவும் முருங்கைக்கீரை சாப்பிடலாம். 

முறை 

  • நீங்கள் சமைக்கும் காய்கறிகளில் சில முருங்கை இலைகளை சேர்த்துக் கொள்ளலாம் அல்லது முருங்கை இலையை கொண்டு பொரியல், சாம்பார் அல்லது ஆம்லெட் செய்து சாப்பிடலாம். 
  • அடை தோசை அல்லது தோசை மாவிலும் சில முருங்கை இலையை கலந்து தோசை செய்து சாப்பிடலாம். 

வெந்தயம் 

fenugreek for women after delivery

நம் சமையல் அறையில் இருக்கக்கூடிய இந்த வெந்தயம் பசி ஆர்வத்தை கட்டுப்படுத்துவதோடு மட்டுமின்றி உடல் நலம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது. இது தாய்மார்களுக்கு ஆற்றலை வழங்குவதுடன் தாய்ப்பால் உற்பத்தியையும் அதிகரிக்க உதவுகிறது. 

முறை 

  • ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். 
  • மறுநாள் காலையில் இந்த நீரை கொதிக்க வைத்து குடிக்கலாம். 

சீரகம் 

cumin for women after delivery

இதில் இரும்புச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடலுக்கு ஆற்றலை தருகிறது மற்றும் வீக்கத்தையும் குறைக்கிறது. இதனுடன் மிக முக்கியமாக சீரகம் தாய்ப்பால் உற்பத்தியையும் அதிகரிக்க உதவுகிறது. 

முறை 

  • ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 
  • இந்த தண்ணீரை கொதிக்க வைத்து சாப்பிட்ட பிறகு குடிக்கலாம். 

 

இந்த பதிவும் உதவலாம்: இரவு தூங்குவதற்கு முன் தொப்புளில் ஒரு துளி மஞ்சள் தடவினால் இவ்வளவு நன்மைகளா!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம். 

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com