30 நாட்கள் 10 கிலோ எடை இழப்பு என்பது எளிதாக காரியம் அல்ல. 30 நாட்களுக்குள் 10 கிலோ எடையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதால் பொதுவாக நீங்கள் அதிகம் கலோரி உட்கொள்பவராக இருந்தால் கண்டிப்பாக அதை குறைக்க வேண்டும். நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு முறை எப்படி இருக்க வேண்டும் என்றால் அதிக புரதச் சத்து கொண்ட உணவுகள், உடற்பயிற்சி இருக்க வேண்டும். எடையை குறைக்க உணவுத் திட்டத்தை பாலோ செய்வதற்கு முன் எடை இழப்புக்குப் பின்னால் உள்ள அறிவியலைப் புரிந்துகொள்ள வேண்டியது. நீங்கள் தினமும் சாப்பிடும் கலோரிகளில் இருந்து 500-1000 குறைவாகச் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தினமும் என்ன மாதிரியானஉணவுகள் எடுத்துக்கொண்டால் எளிதாக எடை குறைக்கலாம் என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க: குளிர்காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 முக்கிய ஆரோக்கிய நன்மைகள்
உடலில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்த காலை நச்சுகளை வெளியேற்றி புத்துணர்ச்சியூட்டும் டிடாக்ஸ் பானத்துடன் நாளை தொடங்கவும். இதற்கு சிறந்தது வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம் அல்லது புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம், கிரீன் டி, இஞ்சி டீ, மற்றும் மசாலா கலந்த பானம் இவை அனைத்தும் சிறந்த பானமாகும்.
Image Credit: Freepik
எடையை குறைக்க நினைத்து காலையில் சாப்பிடாமல் இருப்பது தீர்வாக இருக்காது. எடை குறைக்க காலை உணவு என்பது மிக முக்கியமான உணவாகும். மேலும் காலையை சத்தான இருக்க திட்டமிட வேண்டும். சுவையுடன் ஆரோக்கியம் கலந்த உணவாக இருக்க வேண்டும். இதற்கு காலையில் வேகவைத்த உணவு எடுத்துக்கொள்வது சிறந்த தேர்வாக இருக்கும். இட்லி, புட்டு, காய்கறி கலந்த உப்மா, பல தானியங்கள் கலந்த இட்லி, தானியங்கள் கலந்த மாவு கஞ்சி, வேகவைத்த முட்டை மற்றும் பழங்கள் கொண்ட சாலட். இவைகளை 30 நாட்களுக்கும் மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளலாம்.
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உணவு நேரத்தில் அதிகமாக சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளவும். உங்களுக்கு முழுமையாக சாப்பிடாதா உணர்வு இருதால் காலை உணவுக்கு பிறகு சிறிது நேரம் கழித்து ஆரோக்கியமான தின்பண்டங்களைச் சாப்பிடலாம். பழ வகைகளில் எதேனுன் ஒரு ஜூஸ், உப்புக்கடலை, சியா விதைகள் கலந்த தயிய் அல்லது மேர் போன்று எடுத்துக்கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு மதிய உணவு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு முறைகளை திட்டமிடுதல் கண்டிப்பாகத் தேவை. எடை இழப்புக்குச் சத்தான மதிய உணவை தேர்வு செய்வது முக்கியம். மதியத்தில் அரிசிக்குப் பதிலாகக் கருப்பு கவுனி அரிசி எடுத்துக்கொள்ளலாம். காய்கறிகளுடன் கலந்த பருப்பு வகைகள் நல்லது, கீரை வகைகள், பன்னீர், மீன் வகைகள், சிக்கன், மற்றும் காய்கறி சாலட், கடைசியாக எலுமிச்சை ஜூஸ் சேர்க்கலாம். இவை உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க உதவும்.
Image Credit: Freepik
இரவு உணவின் போது அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்க மாலையில் சத்தான சிற்றுண்டி எடுத்துக்கொள்ளவும். காய்கறி சூப், நட்ஸ்கள், விதைகள் இதுபோன்ற சில உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
கிச்சடி, அரிசி, பருப்பு மற்றும் பலவகையான காய்கறிகள் இரவு உணவில் எடுத்துக்கொள்ளலாம். சப்பாத்தி, தோசை மற்றும் இட்லி போன்ற வேகவைத்து உணவுகள் இரவில் எடுத்துக்கொள்ள மிதமாக இருக்கும். கடைசியாகப் பருப்பு சூப் ஒரு திருப்திகரமான மற்றும் ஆறுதலான இரவு உணவாக இருக்கும்.
ஒரு மாதத்திற்கு இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் எடை குறைப்பு விகிதத்தைக் கண்டிப்பாக உங்களால் உணர முடியும். இதனுடன் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். அளவான உணவு கண்டிப்பாகப் பலன் தரும்.
மேலும் படிக்க: 30 வயதுக்கு மேல் பெண்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் கருப்பு எள்ளுவில் இருக்கும் சத்துக்கள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com