Drumstick Benefits : முருங்கைக்காயின் மிகச்சிறந்த மூன்று நன்மைகள் பற்றி தெரியுமா?

ஆரோக்கியமான உணவின் மீது அதிக விருப்பம் கொண்டவரா நீங்கள்? இன்றைய பதிவில் ஆரோக்கியமான ஒரு அற்புத காய்கறியை பற்றி பார்க்க போகிறோம்…

benefits of drumstick for women health

முருங்கை மரம் ஆரோக்கியத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அதிலும் சுவை மிகுந்த முருங்கைக்காய்களில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன. இந்த காய்கறியை சாம்பார், சூப், அவியல் போன்ற பல்வேறு உணவுகளில் பயன்படுத்தலாம். இன்றைய பதிவில் முருங்கை காயின் மிகச்சிறந்த மூன்று நன்மைகளைப் பற்றி பார்க்கப் போகிறோம்.

முருங்கைக்காயில் சக்தி வாய்ந்த பண்புகள் ஏராளமாக உள்ளன. முருங்கைக்காயில் கேரட்டை விட அதிகமான வைட்டமின் A, பாலை விட அதிகமான கால்சியம், கீரைகளை விட அதிகமான இரும்புச்சத்து, ஆரஞ்சை விட அதிகமான வைட்டமின் C மற்றும் வாழைப்பழங்களை விட அதிகமான பொட்டாசியம் உள்ளன. இதுபோன்று அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலை பல்வேறு நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கின்றன. மேலும் முருங்கை இலையில் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் உள்ளன.

இன்றைய பதிவில் ஆயுர்வேத மருத்துவரும் சுகாதாரப் பயிற்சியாளருமான டாக்டர் ஐஸ்வர்யா சந்தோஷ் அவர்கள் முருங்கை காயின் நன்மைகளை நம்முடன் பகிர்ந்துள்ளார்.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது

benefits of drumstick for bones

எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முருங்கைக்காய் சாப்பிடலாம். இதில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. இவ்விரண்டும் வலுவான எலும்புகளை பெற அத்தியாவசியமானவை. இதனுடன் முருங்கைக்காயில் உள்ள பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற தாதுக்கள் முதுமையிலும் எலும்பு மற்றும் மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இதன் மூலம் எலும்பு மெலிதல் நோயின் அபாயத்தையும் குறைக்கலாம்.

சர்க்கரை நோய்க்கு நல்லது

benefits of drumstick for diabetes

முருங்கைக்காயில் உள்ள சத்துக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை தரும். இது சிறுநீர்ப்பையில் உள்ள நச்சுக்களை அகற்றி, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

முருங்கைக்காயில் உள்ள கிளைகோசைட்-கிரிப்டோ குளோரோஜெனிக் அமிலம் சர்க்கரை நோயின் தாக்கத்தை குறைக்கிறது. எனவே, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முருங்கைக்காயை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

வயிற்றுக்கு உகந்தது

benefits of drumstick for stomach

முருங்கைக்காயில் உள்ள வைட்டமின் B செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க உதவும். இது செரிமானத்தை எளிதாக்குகிறது. மேலும் முருங்கைக் காயில் நிறைந்துள்ள நார்ச்சத்து மலச்சிக்கல், அசிடிட்டி போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் தரும்.

இது அல்சர் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. எனவே அல்சரின் அபாயத்தை குறைக்க முருங்கைக்காய் சாப்பிடலாம்.

முருங்கைக் காயை போலவே முருங்கை கீரையும் வாரத்தில் 1-2 இரண்டு முறை சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

இந்த பதிவும் உதவலாம்: தலைவலி, அசிடிட்டி, வாயு இந்த மூன்று பிரச்சனைக்கும் ஒரே டீ போதும்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP