
உடல் எடையை வேகமாக குறைக்க ஒரு எளிய வழி தினமும் இளநீர் குடிப்பது. இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். காலம் காலமாக மகத்துவமான இந்த இளநீர் பானத்தை குடித்து பயன்பெறுவதை நம்மில் பலரும் மறந்து விட்டோம். நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சிறந்த பானங்களில் இளநீரும் முக்கியமான ஒன்று. சுவை நிறைந்த இந்த இளநீர் நம் உடல் எடையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. இளநீர் குடித்தால் உடல் எடை குறையுமா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் உள்ளது, இதுகுறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த இளநீரில் குறைந்த அளவு கலோரிகள் மட்டுமே உள்ளது. இதனால் இந்த இளநீர் எளிதில் ஜீரணம் ஆகிவிடும். அதேபோல இதில் நிறைந்துள்ள பயோ ஆக்டிவ் என்சைம்கள் நம் உணவு செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் பெரிதும் உதவுகின்றது. நம் உடலில் வளர்ச்சிதை மாற்ற விகிதம் அதிகமாக இருந்தால் அதிக கொழுப்புகளை எரிக்க முடியும். இது உங்கள் உடலின் நீர் சத்தை தக்க வைத்து உடலை எப்போதும் குளிர்ச்சியாக உணர வைக்க உதவும். உடல் எடையை குறைப்பதோடு மட்டுமின்றி இந்த இளநீர் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்க உதவுகிறது.
தினசரி இளநீர் குடித்து வந்தால் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் ஆற்றலும் கிடைக்கும். இந்த இளநீரில் இயற்கையான என்சைம்கள், பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நம் உடலை ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது. மேலும் நம் உடலை நீர் சத்துக்களுடன் பராமரிக்க இளநீர் சிறந்த பானம் ஆகும்.

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ள நபர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும் போது இளநீர் சேர்த்துக் கொள்வது நல்லது. இது உங்கள் உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை அளிக்க உதவும்.
இளநீரில் குறைந்த அளவு கலோரிகள் மட்டுமே உள்ளது. இந்த இளநீரில் நிறைந்துள்ள நார்சத்துக்கள் நீண்ட நேரத்திற்கு நம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். இதனால் அடிக்கடி பசி ஏற்படாமல் இருக்கும். சுமார் ஒரு கிளாஸ் இளநீரில் 2.6 கிராம் நார்ச்சத்துக்கள் மட்டுமே உள்ளது. உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கும் இளநீர் ஒரு சிறந்த மருந்து.
நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் உடல் அதிக வியர்வையை சிந்தும். இதனால் உடற்பயிற்சிக்குப் பிறகு நீங்கள் ஆற்றல் இழந்து காணப்படுவீர்கள். இந்த சமயத்தில் இளநீர் குடித்து வந்தால் உங்கள் உடல் இழந்த ஆற்றலை மீட்டெடுக்க உதவும். அதேபோல தயிர் ஸ்மூத்திகள் மில்க் ஷேக் மற்றும் சாக்லேட் பானங்கள் குடிப்பதை விட ஒரு கிளாஸ் இளநீரில் 0.4 கிராம் கொழுப்புகள் மட்டுமே உள்ளது. இதனால் உங்கள் உடல் எடையை பராமரிக்க இளநீர் பெரிதும் உதவுகிறது.
உடல்நல ஆரோக்கியத்தை பெறுவதற்கு இளநீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்லது. இது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும். இதனால் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் தாராளமாக தினசரி காலையில் வெறும் வயிற்றில் இளநீரை குடித்து பயன்பெறலாம்.
இந்த இளநீரில் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் அதிக அளவு நிறைந்து இருந்தாலும் இதில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களும் சர்க்கரை நோயாளிகளும் இளநீரை அதிகமாக குடிக்கக்கூடாது. இந்த இளநீரில் பொட்டாசியம் உட்பட பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இருந்தாலும் அதிகப்படியான பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். உதாரணத்திற்கு சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இளநீர் குடித்தால் வாந்தி, குமட்டல், தசை பலவீனம், போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இதுபோன்ற உடல் நல பிரச்சனைகளை தடுக்க ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com