
நம் தினசரி சமைக்கும் இனிப்பு வகைகளில் சர்க்கரை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கேக் முதல் டீ காபி வரை அனைத்திலும் இனிப்பு சுவைக்காக நாம் சர்க்கரை தான் பயன்படுத்துகிறோம். நம்மில் பலரும் சுவைக்காக வெள்ளை சர்க்கரையை பயன்படுத்திவிட்டு பிறகு அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை அடிக்கடி மறந்து விடுகிறோம். வெள்ளை சர்க்கரை நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு விளைவிக்க கூடும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வதே இல்லை. அதிகமாக வெள்ளை சர்க்கரை சாப்பிட்டால் உடல் பருமன், தொப்பை கொழுப்பு, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இனிப்பு சுவைக்காக வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக ஒரு சில உணவுப் பொருட்களை பயன்படுத்தலாம். வெள்ளை சர்க்கரைக்கு சமமான சுவையான ஆரோக்கிய மாற்றுகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சுத்தமான இந்த தேனில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. நீங்கள் சர்க்கரைக்கு பதிலாக தேனை காபி அல்லது டீயில் சேர்த்து உட்கொள்ளலாம். டீ,காபி மட்டுமல்லாமல் நாம் சமைக்கும் இனிப்பு வகைகளிலும் சர்க்கரைக்கு பதிலாக தேன் பயன்படுத்தலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

இதுவும் தேன் போலவே தான் இருக்கும். மேப்பில் சிறப்பில் வைட்டமின்கள் ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இதை உணவில் சேர்த்து எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.
இந்த வெல்லத்தில் வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நீங்கள் வெல்லத்தை எடுத்துக் கொண்டால் உடல் நலனுக்கு நன்மை பயக்கும்.

இது தேங்காயிலிருந்து எடுக்கப்படும் ஒருவித சர்க்கரை இது பார்ப்பதற்கு வெள்ளம் போல தான் இருக்கும். ஆனால் பிரவுன் கலரில் சர்க்கரை வடிவில் நமக்கு கிடைக்கும். இந்த தேங்காய் சர்க்கரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடும். இதில் குறைந்த அளவு கிளைசெமிக் இன்டெக்ஸ் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் கூட இந்த தேங்காய் சர்க்கரையை சாப்பிட்டு வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இது இயற்கை முறையில் இனிப்பு சுவையைக் கொண்ட ஒரு பழம். வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பேரீச்சம் விழுதை சேர்த்து சாப்பிட்டு வரலாம். இந்த பேரிச்சம் பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்க உதவுகிறது.
இந்த கருப்பட்டி சர்க்கரை விட அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு இனிப்பு பொருள். குறிப்பாக பெண்கள் கருப்பை ஆரோக்கியத்திற்கு இந்த கருப்பட்டி அதிக அளவு நன்மை அளிக்க உதவுகிறது. தினசரி நாம் குடிக்கும் டீ காபியில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக இந்த கருப்பட்டி சேர்த்து குடித்து வரலாம். இதன் சுவையும் சிறந்ததாக இருக்கும்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com