Right Way to Eat Cashew : முந்திரி சாப்பிடுவதற்கான சரியான முறை இது தான், இனி இப்படி சாப்பிடுங்க!

முந்திரி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் அதை சாப்பிடுவதற்கான சரியான நேரம், அளவு மற்றும் முறையை பின்பற்ற வேண்டியது அவசியம்.

right way time to eat cashew nuts

உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டும். அந்த வகையில் நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. முந்திரி, அக்ரூட் பருப்புகள், பாதாம், பிஸ்தா போன்றவற்றில் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய பண்புகள் அதிக அளவில் உள்ளன.

பெரும்பாலான நட்ஸ் வகைகள் சூடான விளைவை கொண்டு இருப்பதால் அதனை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக கோடை காலத்தில் இதை வரம்பிற்குள் சாப்பிட வேண்டும். முந்திரியில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், கால்சியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

இத்தகைய நற்பண்புகள் உடைய முந்திரியை உங்கள் உணவில் சேர்க்கும் பொழுது ஒரு சில விஷயங்களை கவனித்துக் கொள்ளுமாறு நிபுணர் அறிவுறுத்துகிறார். முந்திரி சாப்பிடுவதற்கான சரியான முறை குறித்து ஊட்டச்சத்து நிபுணரான சிம்ரன் கவுர் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

முந்திரி பருப்பு சாப்பிடும் முறை

cashew right method to eat

  • முந்திரி சூடான விளைவை கொண்டுள்ளது ஆகையால் கோடைகாலத்தில் முந்திரியை ஊற வைத்த பிறகே சாப்பிட வேண்டும்.
  • ஒரு நபர் ஒரு நாளைக்கு 4-5 முந்திரிக்கு மேல் சாப்பிடக்கூடாது.
  • முந்திரியில் நல்ல கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளன. ஆகையால் இதனை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதனை சரியான அளவுகளில் எடுத்துக்கொள்ளும் பொழுது இது எடை இழப்புக்கும் உதவும்.
  • நிபுணரின் கருத்துப்படி முந்திரியை உணவிற்கு இடைப்பட்ட நேரங்களில் எடுத்துக் கொள்வது நல்லது.
  • உடலில் இரத்தம் குறைவாக உள்ளவர்கள் முந்திரியை தாராளமாக சாப்பிடலாம். இது உடலில் உள்ள இரும்பு சத்து குறைபாடு அல்லது குறைந்த ஹீமோகுளோபின் அளவை சமாளிக்க உதவுகிறது.
right way eat cashews
  • முந்திரியில் வைட்டமின் E மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை சருமம் மற்றும் தலை முடிக்கு நன்மை பகிக்கின்றன.
  • கர்ப்பிணி பெண்கள் முந்திரியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உடலுக்கு பலம் கிடைக்கும். மேலும் முந்திரியில் உள்ள துத்தநாகம் மற்றும் ஃபோலிக் ஆசிட் குழந்தையின் வளர்ச்சிக்கும் நன்மை தரும்.
  • முந்திரி சாப்பிடுவது வளர்ச்சிதை மாற்றத்திற்கு நல்லது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.
  • மாதவிடாய் நாட்களில் வலி மற்றும் அதிக இரத்தப்போக்கு உள்ள பெண்கள், முந்திரியை தங்கள் உணவு சேர்த்துக் கொள்ளலாம்.
  • முந்திரி சாப்பிடுவது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் நன்மை தரும். இது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: இரவு தூங்குவதற்கு முன் தொப்புளில் ஒரு துளி மஞ்சள் தடவினால் இவ்வளவு நன்மைகளா!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP