இலவங்கபட்டை ஒரு மருத்துவ குணமிக்க மசாலாப் பொருளாகும். இது உணவிற்கு சுவையும், நறுமணமும் சேர்க்கும். நம் வீடுகளில் சமைக்கும் பல உணவு பொருட்களில் சுவையை அதிகரிக்க இந்த இலவங்கப்பட்டை சேர்ப்பது வழக்கம். ஆனால், நீங்கள் தினமும் காலையில் குடிக்கும் தேநீர் அல்லது பாலில் இலவங்கப் பொடியை சேர்ப்பதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். இந்தக் கட்டுரையில், தேநீர் மற்றும் பாலில் இலவங்கப் பொடி சேர்ப்பதன் முக்கிய நன்மைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
இலவங்கப் பொடியில் உள்ள சில சேர்மங்கள், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. தினமும் தேநீர் அல்லது பாலில் ஒரு சிட்டிகை இலவங்கப் பொடியை சேர்த்து குடித்தால், நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிய உதவியாக இருக்கும்.
இலவங்கபட்டை, இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு (LDL) அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பு (HDL) அளவை அதிகரிக்கிறது. இது இதய நோய்கள் மற்றும் ஸ்ட்ரோக் வருவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது. தினசரி இலவங்கம் கலந்த தேநீர் அல்லது பால் குடிப்பது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
இலவங்கபட்டை செரிமான சிக்கல்களைக் குறைக்கும் ஒரு சிறந்த மூலிகையாகும். இது வயிற்றுப் புண், வாயு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது. தேநீர் அல்லது பாலில் இலவங்கப் பொடியைச் சேர்த்து குடித்தால், உணவு செரிமானம் சீராக இருக்கும்.
இலவங்கப் பொடி உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்பை எரிக்க உதவுகிறது. தினமும் காலையில் இலவங்கபட்டைத் தூள் கலந்த தேநீர் அருந்தினால், உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.
இலவங்கபட்டைத் தூள் ஆக்ஸிஜனேற்ற குணமும், நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியும் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, பாக்டீரியா, வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. குளிர், சளி போன்றவற்றைத் தடுக்க இலவங்கபட்டை கலந்த பால் சிறந்தது.
இலவங்கபட்டையில் அழற்சி எதிர்ப்பு குணங்கள் உள்ளன. இது மூட்டு வலி, தசை வலி மற்றும் உடல் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. தினமும் இலவங்கப் பொடியை பாலுடன் சேர்த்து குடித்தால், வலி நிவாரணம் கிடைக்கும்.
இலவங்கபட்டை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்கிறது. இது அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நரம்பியல் நோய்களின் ஆபத்தைக் குறைக்கிறது.
இலவங்கத்தின் நறுமணம் நம் மனதை ஆற்றுப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இரவில் இலவங்கம் கலந்த பால் குடித்தால், நல்ல தூக்கம் கிடைக்கும்.
அந்த வரிசையில் தேநீர் அல்லது பாலில் இலவங்கப் பொடியைச் சேர்ப்பது எளிமையான ஒரு முறையாக இருந்தாலும், அதன் நன்மைகள் ஏராளம். இரத்த சர்க்கரை, இதய ஆரோக்கியம், செரிமானம், எடை குறைப்பு போன்ற பல நோய்களுக்கு இலவங்கம் இயற்கை மருந்தாக செயல்படுகிறது. ஆனால் அதிக அளவு இலவங்கம் உபயோகிப்பது கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே, ஒரு சிட்டிகை அளவே போதுமானது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com