பொதுவாகவே இந்த உலர் திராட்சை பச்சை, கருப்பு மற்றும் கோல்டன் என்று மூன்று நிறங்களில் கிடைக்கும். இந்த உலர் திராட்சைகளில் வைட்டமின் பி சத்து, வைட்டமின் சி, போலிக் ஆசிட், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம் சத்து அதிக அளவு நிறைந்துள்ளது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடல் எடை அதிகரிக்காமல் பராமரிக்கவும் இந்த உலர் திராட்சையை சாப்பிட்டு வரலாம். அந்த வரிசையில் உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
கை அளவு உலர் திராட்சையில் 108 கலோரிகள், 29 கிராம் கார்போஹைட்ரேட், ஒரு கிராம் புரதச்சத்து, 21 கிராம் சர்க்கரை, ஒரு கிராம் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை தவிர இரும்பு சத்து காப்பர் பொட்டாசியம் வைட்டமின் பி6 மாங்கனிஸ் போரான் போன்ற சத்துக்களும் நிரம்பி உள்ளது. இந்த நிலையில் உலர் திராட்சைகளை ஊறவைத்து சாப்பிடுவது மூலம் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
ரெண்டு கப் தண்ணீரில் 150 கிராம் உலர் திராட்சைகளை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இப்போது இந்த தண்ணீரை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பிறகு காலையில் இந்த தண்ணீரை வடிகட்டி குறைந்த தீயில் மீண்டும் சூடாக்கிக் கொள்ளவும். இதனைத் தொடர்ந்து இந்த உலர் திராட்சை தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இதன் சுவையை மேலும் அதிகரிக்க சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். குறிப்பாக இந்த உலர் திராட்சை தண்ணீரை குடித்த பிறகு அடுத்த முப்பது நிமிடங்களுக்கு எந்த உணவையும் சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த உலர் திராட்சை தண்ணீர் நம் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி ரத்தத்தை சுத்தப்படுத்த பெரிதும் உதவுகிறது. அசிடிட்டி போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும் உலர் திராட்சை தண்ணீரை குடித்து வந்தால் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு குறையும். இரவு முழுவதும் உலர் திராட்சை ஊற வைக்கப்பட்ட தண்ணீரில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். அதேபோல வைரஸை தடுக்க தினமும் உலர் திராட்சை ஊற வைத்த தண்ணீரை குடித்து வந்தால் நல்லது. தினசரி காலை வெறும் வயிற்றில் இந்த உலர் திராட்சை தண்ணீரை குடித்து வருவதால் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகள் நீங்கி உடல் எடை குறைய உதவுகிறது. மேலும் இது இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. அதே போல மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த உலர் திராட்சை தண்ணீரை குடித்து வரலாம். இது நம் குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவும்.
இந்த உலர் திராட்சை தண்ணீரில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்து. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுவதன் மூலம் ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. இந்த உலர் திராட்சை தண்ணீரில் உள்ள போரான் நம் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. மேலும் நம் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்து இந்த உலர் திராட்சையில் அதிகளவு நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com