herzindagi
Untitled design  x ()

Fruits To Reduce Cholestrol: கொலஸ்ட்ரால் அளவை குறைக்க இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்!

நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் பழங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 
Editorial
Updated:- 2024-05-06, 14:40 IST

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் பழக்கங்கள். நாம் உட்கொள்ளும் உணவுகளும் குடிக்கும் குளிர்பானங்களும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்கிறது. அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையை அலட்சியம் செய்தால் உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வது மற்றும் உணவில் சில மாற்றங்களை செய்வது மூலம் உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில் உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவும் பழங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

ஆரஞ்சு:

நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவதில் இந்த ஆரஞ்சு பழம் மிகவும் பயனுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இது நம் உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை ரத்தக்குழாய்களில் இருந்து நீக்க உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் மட்டுமல்லாமல் மற்ற சிட்ரஸ் பழங்களிலும் இந்த ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் இதுபோன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டு வரலாம்.

வாழைப்பழம்:

banana

முக்கனிகளில் ஒன்று இந்த வாழைப்பழம். உடல் எடையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் இந்த வாழைப்பழம், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் என்று கூறினால் பலருக்கும் நம்ப முடியாது. இது கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த பழம் என்பதால் நம் உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. அதே போல வாழைப்பழம் சாப்பிடுவதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முடியும். மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் வாழைப்பழம் பெரிதும் உதவுகிறது. 

அவகேடோ:

avocados title cb ()

அவகேடோ வெண்ணெய் பழம் என்று கூறப்படுகிறது. இந்த வெண்ணெய் பழத்தை சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என்று பல மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. மருத்துவ ஆராய்ச்சிகளின் படி இந்த வெண்ணெய் பழத்தில் ஒலிக் என்ற அமிலம் உள்ளது. இது நம் உடலில் இருந்து ரத்த ஓட்டத்தின் நடுவில் வரும் கொலஸ்ட்ராலை நீக்க உதவுகிறது. அதே போல இந்த வெண்ணெய் பழம் நம் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலம் சுத்தம் செய்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

மேலும் படிக்க: ஆரோக்கியத்தை மேம்படுத்த இரும்புசத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க!

அன்னாசி பழம்: 

பொதுவாகவே உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த அன்னாசி பழத்தை சாப்பிட்டு வரலாம். நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இந்த அன்னாசிப் பழத்தில் நிறைந்துள்ளது. இது நம் உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு இந்த அன்னாசிப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Image source: google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com