herzindagi
image

முட்டைக்கு நிகரான புரதம்; ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த 5 உணவுகளை அவசியம் சாப்பிடவும்

முட்டைக்கு நிகரான அளவில் புரதம் கொண்ட ஐந்து உணவுகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். இவை நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
Editorial
Updated:- 2025-09-19, 11:20 IST

இன்றைய வாழ்க்கை முறை மாற்றங்களின் அடிப்படையில் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. இதனால் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று சரியான முறையில் உடற்பயிற்சி மேற்கொள்வதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். அதே நேரத்தில் சரியான உணவு முறை இருந்தால் மட்டுமே ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.

மேலும் படிக்க: Karuppu kavuni rice benefits: தினசரி உணவில் கருப்பு கவுனி அரிசி சேர்ப்பதால் பெறும் நன்மைகள்

 

நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் புரதம் பெரும் வங்கு வகிக்கிறது. முட்டையில் அதிகமான புரதச் சத்து இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். எனினும், மற்ற உணவுகளில் இருக்கும் புரதம் குறித்து பெரும்பாலானவர்கள் அறிவதில்லை. அதனடிப்படையில், புரதச்சத்து நிறைந்த ஐந்து உணவுகளை இதில் காண்போம். இவற்றில் புரதம் மட்டுமின்றி மேலும் பல சத்துகள் நிறைந்துள்ளன.

 

பனீர்:

 

புரதச் சத்து நிறைந்த உணவு பொருட்களில் பனீர் மிகவும் எளிமையான மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒன்றாகும். 100 கிராம் பனீரில் ஏறத்தாழ 13 கிராம் புரதம் உள்ளது. இது உடல் எடை அதிகரிக்கவும், தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

Paneer

 

பூசணி விதைகள்:

 

பூசணி விதைகள் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் ஊட்டச்சத்துகள் நிறைந்தவை. அந்த வகையில், 28 கிராம் பூசணி விதைகளில் 9 கிராம் புரதம் உள்ளது. மெக்னீசியம், சின்க் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த இந்த விதைகள், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.

மேலும் படிக்க: Sardine fish benefits: கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்; எலும்புகளை வலுவாக்கும்; மத்தி மீனின் நன்மைகள்

 

ராஜ்மா:

 

ராஜ்மாவில் சுவை மட்டுமின்றி சத்துகளும் நிறைவாக இருக்கின்றன. அரை கப் சமைத்த ராஜ்மாவில் 8 கிராம் புரதம் கிடைக்கிறது. மேலும், இதில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதுடன், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது.

 

கொண்டைக்கடலை:

 

அரை கப் கொண்டைக்கடலையில் சுமார் 8 கிராம் புரதம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் ஃபோலேட் உள்ளன. இது ஆற்றலை அதிகரிக்கும் உணவாக ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், இது சோர்வை குறைக்கவும் உதவுகிறது.

Chik peas

 

வேர்க்கடலை:

 

'ஏழைகளின் பாதாம்' என்று அழைக்கப்படும் வேர்க்கடலையில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. 100 கிராம் வேர்க்கடலையில் சுமார் 25 கிராம் புரதம் உள்ளது. இதில் வைட்டமின் ஈ-யும் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது.

 

எனவே, இது போன்ற ஆரோக்கியமான உணவுகளை நாள்தோறும் எடுத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய உடல்நலனை சரியான முறையில் பராமரிக்க முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com