உடல் எடைக்கும் நாம் சாப்பிடும் உணவுக்கும் தொடர்பு இருக்கா என்று கேட்டால் ஆம் என்பது தான் பதில். உங்கள் உடல் எடையில் நீங்கள் உட்கொள்ளும் உணவு தான் பெரிய பங்கு வகிக்கிறது. பசிக்கு ஏற்ப ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும், குறிப்பாக காலை மதியம் இரவு என்று மூன்று வேளையும் உணவை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். இரவில் என்ன உணவு சாப்பிடுவது என்று பலருக்கும் குழப்பம் இருக்கும். காரணம் இரவு உணவு எளிதில் ஜீரணிக்க கூடியதாக இருக்க வேண்டும். எடை குறைப்பது நம்மில் பலருக்கும் ஒரு சவாலான பணியாக இருக்கலாம், ஆனால் சரியான உணவு முறையைப் பின்பற்றினால் உடல் எடை குறைப்பது ஈஸி தான். இரவில் குறைந்த கொழுப்பு உணவுகளைச் சேர்த்துக்கொள்வது உடனடியாக எடை குறைக்க உதவும். அந்த வரிசையில் எடை குறைப்புக்கு உதவும் சில குறைந்த கலோரி உணவு வகைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பச்சை காய்கறிகள் நிறைய நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களைக் கொண்டுள்ளன. கேரட், வெள்ளரி, தக்காளி, கீரை போன்றவற்றை சாலட்டாக செய்து சாப்பிடலாம். இதில் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய்த்துருவல் சேர்த்து சுவையை அதிகரிக்கலாம். இந்த உணவு கலோரிகளைக் குறைக்கும் அதே வேளை உங்கள் பசியையும் தணிக்கும்.
சாதத்தைக் குறைந்த அளவில் சாப்பிட்டு, அதனுடன் பருப்பு குழம்பு அல்லது கீரைக் குழம்பைச் சேர்த்துக்கொள்ளலாம். பருப்பு புரதம் நிறைந்தது, மற்றும் கீரை இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டது. இவை இரண்டும் வயிற்றை நிரப்பி அதிக கலோரி உட்கொள்ளலைத் தடுக்கும்.
கொழுப்பு குறைந்த கோழி மார்பு இறைச்சி அல்லது மீனை எண்ணெய்யில் வறுக்காமல் வேகவைத்து அல்லது ஸ்டீம் செய்து சாப்பிடலாம். இவை உயர் புரதம் கொண்டவை மற்றும் பசியை குறைக்க உதவும். அதே போல மீனில் உள்ள ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடல் உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
உடனடியாக எடை குறைக்க சூப் ஒரு சிறந்த வழி. பாசி பருப்பு, துவரம் பருப்பு, கேரட், பீன்ஸ் போன்றவற்றைக் கொண்டு சுவையான சூப் தயாரிக்கலாம். இது உங்கள் வயிற்றை நிரப்பும், ஆனால் கலோரி மிகவும் குறைவாக இருக்கும். இதனால் இரவில் உணவாக இந்த சூப் உங்களுக்கு உதவும்.
தயிர் சாதம் ஒரு சிறந்த குறைந்த கொழுப்பு கொண்ட இரவு உணவு. இதில் நிறைய புரதம் மற்றும் புரோபயாடிக் கிருமிகள் உள்ளன, இது செரிமானத்தை மேம்படுத்தும். சிலருக்கு இரவில் தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்ற கவலை இருந்தால் மோர் சாதம் செய்து சாப்பிடுங்கள்.
இரவு உணவுக்குப் பிறகு சீரகம் கொதிக்க வைத்த தண்ணீர் அல்லது மேத்தித் தண்ணீர் குடிப்பது கொழுப்பைக் கரைக்க உதவும். இது உணவு செரிமானத்தை சீராக்கி, வயிறு பருமனைக் குறைக்கும்.
மேலும் படிக்க: அதிகமா மோமோஸ் சாப்பிட்டால் என்ன ஆகும்? இந்த மோசமான விளைவுகளை தெரிஞ்சிக்கோங்க
அந்த வரிசையில் இரவு உணவில் குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளைச் சேர்த்துக்கொள்வது எடை குறைப்புக்கு உதவும். மேலே குறிப்பிட்ட உணவுகளை தினமும் சாப்பிட்டு, வழக்கமான உடற்பயிற்சி செய்து வந்தால், உடனடியாக உடல் எடை குறைவதை பார்க்கலாம்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com