காலையில் இந்த உணவுகளைத் தான் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்; ஏன் தெரியுமா?

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய உணவுகள் தான் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதோடு, வளர்சிதை மாற்றத்தையும் சீராக வைத்திருக்க உதவுகிறது.
image
image

காலை உணவைச் சாப்பிடுவதை எப்போது தவிர்க்கிறோமோ? அந்த நாள் முதலே பல உடல் நல பிரச்சனைகளையும் நாம் சந்திக்க தயாராகிவிட்டோம் என்று அர்த்தம்.இந்த சுழலைத் தவிர்க்க வேண்டும் காலை உணவைக் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை காலை உணவு சாப்பிட தாமதமாகும் பட்சத்தில் சில உணவுகளை முன் பசிக்காக சாப்பிடலாம்.

இந்நேரத்தில் அனைத்து உணவுகளையும் வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. இல்லையென்றால் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தி செரிமான அமைப்பையும் பாதிக்கும். காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிட வேண்டும் என்பது குறித்த தகவல்கள் இங்கே.

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய உணவுகள்:

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய உணவுகள் வளர்சிதை மாற்றத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது.

தயிர்:

வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவது உடலுக்கு ஆற்றலை அளிக்கும். இதில் உள்ள புரோயடிக்குகள் செரிமான அமைப்பை சீராக்குவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான ஆற்றலையும் பெற தயிர் உதவுகிறது.

பப்பாளி:

காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெற உதவக்கூடும். குறிப்பாக பப்பாளி பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குடல் இயக்கத்தை சீராக்குகிறது. மேலும் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து இதயம் தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்கிறது.

மேலும் படிக்க:குளிர்கால உணவுமுறையில் இந்த 5 உணவுகளை மறக்காம சேர்த்துக்கோங்க

காய்கறி சூப் :

காலை உணவுகளைச் சாப்பிடுவதற்கு முன்னதாக உடல் ஆரோக்கியத்திற்காக பழச்சாறுகளைப் பலர் அதிகம் உபயோகிப்பார்கள். இதை சாப்பிடுவது உடலுக்கு பல நேரங்களில் கேடு விளைவிக்கும். எனவே பச்சைக் காய்கறிகள், கேரட், பீட்ரூட், புதினா, கொத்தமல்லி இலை போன்றவற்றை காலையில் ஜூஸாக செய்து பருகுவது நல்லது. உடலுக்கு ஆரோக்கியத்தோடு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

ஊற வைத்த பாதாம்:

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய உணவுகளின் பட்டியலில் ஊற வைத்த பாதாமும் இடம் பெறுகிறது. 10 அல்லது 15 பாதாம் பருப்புகளை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.

வாழைப்பழம்:


இரவில் சாப்பிடக்கூடிய உணவுகள் எளிதில் ஜீரணமாவதற்கு வெறும் வயிற்றில் வாழைப்பழங்களை சாப்பிடலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனைகளைத் தீர்க்கிறது. இதோடு உடலுக்கு ஆற்றலையும், நாள் முழுவதும் தேவைப்படக்கூடிய ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்கு தேன், சூடு தண்ணீர், சீரக தண்ணீர் போன்றவற்றைப் பருகுவது நல்லது.

மேலும் படிக்க:குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க; இந்த 4 சிட்ரஸ் பழங்களை சாப்பிடுங்க

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP