நம்முடைய இந்தியர்களின் சமையலில் முக்கிய நறுமண மசாலாக்களில் ஒன்றாக உள்ளது ஏலக்காய். டீ முதல் பிரியாணி வரை அனைத்திலும் உபயோகிக்கும் ஏலக்காய், நறுமணத்தை மட்டும் அல்ல உணவிற்கு கூடுதல் சுவையையும் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதே சமயம் தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்னதாக ஒரு ஏலக்காயை சாப்பிட்டுப் பாருங்கள். நிச்சயம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும். இதோ அவற்றில் சில உங்களுக்காக..
ஏலக்காயும் உடல் நல ஆரோக்கியமும்:
ஏலக்காயில் உள்ள புரதம், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் சி, நியாசின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடல் செயல்பாடு சீராக இருக்க உதவுகிறது.
சீரான செரிமானம்:
குமட்டல், வயிறு பெருமல், வாந்தி போன்ற பல்வேறு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றால் தினமும் இரவு தூங்கச் செல்லும் போது ஏலக்காய் சாப்பிடவும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஜீரண எஞ்சைம்களை தூண்டி சாப்பிடக்கூடிய உணவுகளை எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது. ஏலக்காயில் உள்ள டையூரிக் பண்புகள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரல் செயல்பாட்டை சீராக்குகிறது.
நிம்மதியான தூக்கம்:
தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படக்கூடியவர்கள் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னதாக ஏலக்காய் சாப்பிடலாம். இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உடலின் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது. மேலும் நல்ல தூக்கத்திற்கு உதவும் வகையிலான மெலடோனின் என்ற ஹார்மோன்களை உடலில் உற்பத்தி செய்கிறது. எனவே மன அழுத்தம் குறைவதோடு நிம்மதியான தூக்கத்திற்கும் வழிவகுக்கிறது.
மேலும் படிக்க:மாதவிடாய் வலி நீக்குவது முதல் பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கருப்பு உளுந்து கஞ்சி
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல்:
தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது தூங்க செல்லும் முன்னதாக ஏலக்காயை கொஞ்சம் சாப்பிடுங்கள். இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாவதைத் தடுக்கிறது. மேலும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இரைப்பை குடல் கோளாறுகள், வயிற்றுப்புண்களுக்கு சிகிச்சை மற்றும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க:பெண்களுக்கு ஏற்படும் இரும்புச்சத்து குறைப்படுகளை போக்க தினசரி செய்ய வேண்டியவை
உடல் எடையைக் கட்டுப்படுத்துதல்:
அதிகரித்த உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் கட்டாயம் ஒரு ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக இரவு தூங்க செல்வதற்கு முன்னதாக ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடும் போது உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைகிறது. மேலும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
Image credit: Pexels
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation