இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஹீமோகுளோபின் எனும் புரதமானது, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரும்புச்சத்து குறைபாட்டினால் இரத்த சோகை ஏற்படலாம். பெரும்பாலும் பெண்களே இந்த பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். உடலில் ஹீமோகுளோபின் அளவுகள் குறையும்பொழுது சோர்வு, பலவீனம், ஆற்றலின்மை போன்ற பல அறிகுறிகளை உணரலாம்.
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவுகளை அதிகரிக்க மருந்துகள் சாப்பிடுவதற்கு பதிலாக உணவுகளை நாடுவதே சிறந்தது. ஹீமோகுளோபினை அதிகரிக்க இரும்புச் சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதுடன் இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள ஜூஸையும் முயற்சி செய்து பாருங்கள். இந்த ஜூஸ் பற்றிய தகவல்களை ஆயுர்வேத நிபுணரான தீக்ஷா பவ்சர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: 15 நாட்களில் 3 கிலோ எடையை குறைக்க, நிபுணரின் அட்டகாசமான குறிப்புகள்!
நிபுணர் பரிந்துரை செய்துள்ள இந்த ஜூஸ் சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த மிகச்சிறந்த ஆற்றல் பானமாகும். இது சருமம் மற்றும் தலைமுடியை பராமரிப்பதோடு மட்டுமின்றி ஹீமோகுளோபின் அளவுகளையும் அதிகரிக்கிறது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மைகளை கொடுக்கும். இந்த பானத்தை குடித்து வர ஹீமோகுளோபின் குறைபாட்டினால் ஏற்படும் சோர்வு, முடி உதிர்தல், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற அறிகுறிகளை சமாளிக்க முடியும். ஹீமோகுளோபினை அதிகரிக்க பீட்ரூட் மற்றும் கேரட்டை விட சிறந்த உணவு இருக்கவே முடியாது. பீட்ரூட் இயற்கையாகவே இரத்தத்தை அதிகரிக்க செய்கிறது. அதேசமயம் கேரட் உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க உதவுகிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும். நீங்கள் விரும்பினால் இதில் சிறிதளவு தேன் சேர்த்து குடிக்கலாம்.
இந்த ஜூஸில் வேகவைத்த பீட்ரூட் மட்டும் கேரட் சேர்த்து இருப்பதால் அவற்றை எளிதாக ஜீரணிக்க முடியும். ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புபவர்கள் இந்த அற்புத பானத்தை குடித்து பயன்பெறலாம். வேகவைத்த இந்த காய்கறி ஜூஸை குடிப்பதால் எந்தவித அஜீரண பிரச்சனையும் ஏற்படாது.
உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனை இருந்தால் அல்லது ஏதேனும் உணவுக்கு அலர்ஜி இருந்தால் இந்த ஜூஸை உங்கள் உணவு முறையில் சேர்த்துக் கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.
இந்த பதிவும் உதவலாம்: 30 வயதிலும் கருத்தரிக்காலம், PCOS உள்ள பெண்களுக்கான ஸ்பெஷல் டிப்ஸ்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com