நம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒரு ஊட்டச்சத்து இரும்பு சத்து என்றுதான் கூற வேண்டும். இரும்பு சத்து என்று கூறும் போது பலருக்கும் பேரிச்சம் பழம் தான் முதலில் நினைவிற்கு வரும். ஆனால் இந்த பேரிச்சம் பழத்தை தவிர்த்து பல உணவுகளில் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் அனிமியா என்ற ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் அவர்களின் உடலில் இரும்பு சத்து குறைபாடு இருப்பது தான். பொதுவாகவே நம் ரத்தத்தில் ஒரு லிட்டருக்கு இரும்பு சத்து 11 - 12 கிராம் இருக்க வேண்டும். அந்த வரிசையில் நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை சில உணவுப் பொருட்கள் மூலம் எளிதாக பெறலாம். அது எந்த வகை உணவுகள் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இந்தக் கீரைகளில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உங்கள் தினசரி உணவில் அதிக அளவு கீரைகளை சேர்த்து சாப்பிட்டு வரலாம். கீரைகளில் இரும்பு சத்து அதிக அளவு நிறைந்துள்ளதால் இது உங்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்க பெரிதும் உதவுகிறது.
பாதாம் பருப்பு, வால் நட்ஸ், முந்திரி பருப்பு, ஆப்பிரிக்காட், உலர்ந்த பழங்கள் மற்றும் பேரிச்சம்பழம் போன்ற நட்ஸ் வகைகளில் இரும்பு சத்து அதிக அளவு நிறைந்துள்ளது. உங்கள் உடலில் இரும்பு சத்து பற்றாக்குறை இருந்தால் இது போன்ற உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளையும் உங்கள் தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். தினமும் காலையில் உணவு சாப்பிட்ட பிறகு ஸ்னாக்ஸ் நேரத்தில் இது போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
சோயா பீன்ஸ், பாசிப்பருப்பு போன்ற பருப்பு வகைகளில் இரும்பு சத்து அதிக அளவு காணப்படுகிறது. துவரம் பருப்பை காட்டிலும் பாசிப்பருப்பு நம் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மேலும் கருப்பு உளுந்து, பாசி பயிறு போன்ற பயிறு வகைகளையும் உணவு சேர்த்து சாப்பிட்டால் இரும்பு சத்து பற்றாக்குறை பிரச்சனைகளை நாளடைவில் குணப்படுத்த முடியும்.
சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், ஆளி விதைகள் போன்ற விதைகளில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இந்த விதைகளில் இரும்புச்சத்து அதிக அளவு நிறைந்துள்ளதால் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்க உதவுகிறது. தினசரி உணவில் இது போன்ற விதைகளை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வரலாம். மேலும் இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.
சாக்லேட் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அந்த வரிசையில் இந்த டார்க் சாக்லேட் நம் உடலுக்கு தேவையான இரும்பு சக்தியும் ஆன்டி-ஆக்சிடென்ட்களையும் அளிக்கிறது. இந்த டார்க் சாக்லேட்டில் 55 சதவீதம் கொக்கோ மற்றும் இரும்பு சத்து அதிக அளவு நிறைந்துள்ளது. இதனால் உங்கள் உடலில் இரும்பு சத்து பற்றாக்குறை பிரச்சனைகள் இருந்தால் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க தினமும் சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிட்டு வரலாம்.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com