பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் மோசமான வயிற்று வலி ஏற்படும். இதனால் பெண்களுக்கு தசை பிடிப்பு, வீக்கம் மற்றும் மனநிலை பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது போன்ற நேரங்களில் சில பெண்கள் டார்க் சாக்லேட் அல்லது கேக் சாப்பிடுவார்கள். ஆனால் இந்த மாதவிடாய் காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் நம் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்காது. குறிப்பாக மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிடும் சில உணவுகள் நமக்கு கெடுதலை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. அந்த வரிசையில் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை தவிர்க்க எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உடலில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் அவர்கள் உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும். இதனால் தான் மாதவிடாய் காலத்தில் உடலில் வீக்கம் ஏற்படுகிறது. அதிக தண்ணீர் குடிக்கும் போது உடலில் வீக்கம் குறைய பெரிதும் உதவுகிறது. ஆனால் ஒரு சில பெண்களுக்கு அதிக தண்ணீர் குடிப்பது பழக்கமாக இருப்பதில்லை. இந்த நிலையில் அதிக தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் இதற்கு பதிலாக வெள்ளரிக்காய், தர்பூசணி, கீரை போன்ற நீர்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரலாம். அதே போல மாதவிடாய் காலங்களில் சூடான பானங்களை குடிப்பது தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவும்.
வைட்டமின் பி6 சத்து வாழைப்பழத்தில் அதிக அளவு நிறைந்துள்ளது. இது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசை வீக்கம் மற்றும் தசை பிடிப்பு போன்ற அறிகுறிகளை போக்குவதற்கு பெரிதும் உதவுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வாழைப்பழத்தைக் கொண்டு ஸ்மூதிகள் மில்க் ஷேக் செய்து குடித்து வரலாம். மேலும் இந்த வாழைப்பழ மில்க் ஷேகில் அன்னாசி பழத்தை சேர்த்து சாப்பிடலாம். நம் உடலில் உள்ள புரதத்தை எளிதில் ஜீரணிக்க அன்னாசிப்பழம் பெரிது உதவுகிறது. இதனால் மாதவிடாய் காலத்தில் பெண்கள் வாழைப்பழம் மற்றும் அன்னாசி பழம் சாப்பிட்டு வந்தால் வயிற்று வலியை தவிர்க்க முடியும்.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு தசையில் ஏற்படும் பிடிப்புகளை சரி செய்ய கால்சியம் நிறைந்த உணவுகள் உதவுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது. அதே போல பெண்களின் மனநிலையில் ஏற்படும் சோர்வு, குழப்பம் போன்ற பிரச்சனைகளையும் இந்த கால்சியம் நிறைந்த உணவுகள் குணப்படுத்த உதவுகிறது. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் அதிக அளவு கால்சியம் நிறைந்துள்ளது. ஒருவேளை பால் பொருட்களை சாப்பிட முடியவில்லை என்றால் வெந்தயம் மற்றும் கீரை வகைகளை சாப்பிடலாம்.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com