herzindagi
okhra water for health and detox

Lady Finger Water : ஊற வைத்த வெண்டைக்காய் தண்ணீர், செய்முறை மற்றும் ஆரோக்கிய நன்மைகள்!

எடை இழப்பு முதல் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதை வரை வெண்டக்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளை இன்றைய பதிவில் படித்தறியலாம்…
Editorial
Updated:- 2023-08-30, 13:00 IST

வெண்டைக்காயை சாம்பார் முதல் பொறியியல் வரை பல விதமாக சமைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். சமைப்பதை தவிர வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்து, அந்த நீரையும் குடிக்கலாம். ஆயுர்வேதத்தின்படி இந்த நீரானது எடை இழப்பு, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், இதய நோய் போன்ற பல பிரச்சனைகளுக்கு நன்மை அளிக்கிறது. 

வெண்டைக்காய் நீரை காலையில் குடித்து வர பல உடல் நல பிரச்சனைகளை தடுக்கலாம். இதில் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவை அனைத்தும் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கின்றன. 

இந்த பதிவும் உதவலாம்: 10 வயசு குறைஞ்சு இளமையாக தெரிய, இந்த 3 யோகாசனங்களை செய்யுங்கள்! 

வெண்டைக்காய் தண்ணீரின் செய்முறை மற்றும் நன்மைகளை விரிவாக காண்போம். 

வெண்டைக்காய் தண்ணீர் செய்முறை  

  • முதலில் 4-5 வெண்டைக்காய்களை கழுவி  சுத்தம் செய்து கொள்ளவும். 
  • ஒரு ஜாரில் நான்காக வெட்டிய வெண்டைக்காயுடன் 1.5 லிட்டர் தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். 
  • இந்த ஜாரை சுத்தமான துணியால் இறுக்கமாக மூடி வைக்கவும். 
  • வெண்டைக்காயை குறைந்தது 8 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். 
  • பின்பு வெண்டைக்காயை பிழிந்து, நீரை வடிகட்டி கொள்ளவும். 
  • இந்த அற்புதமான வெண்டைக்காய் நீரை நீங்களும் குடித்து பயன்பெறுங்கள்  

வெண்டைக்காய் தண்ணீர் பயன்கள்   

bindhi water for health

வெண்டைக்காய் நீரில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் நன்மைகள் பின் வருமாறு… 

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்  

வெண்டைக்காயில் இன்சுலின் உற்பத்திக்கு உதவும் பல கலவைகள் உள்ளன. கார்போஹைட்ரேட்டிலிருந்து குளுக்கோஸை பிரிக்க, நம் உடலுக்கு இன்சுலின் ஹார்மோன் தேவைப்படுகிறது. இந்த ஹார்மோனானது கணையத்தால் உடலில் வெளியிடப்படுகிறது. இன்சுலின் குறைபாடு காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இந்நிலையில் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்தவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் வெண்டைக்காய் தண்ணீர் உதவும். 

உடல் பலவீனத்தை போக்கும்  

வெண்டைக்காய் தண்ணீரில் ஆற்றல் பானங்களுக்கு நிகரான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உங்களை நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட அனுமதிக்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக செயல்பட வெண்டைக்காய் தண்ணீர் குடிக்கலாம். 

புற்றுநோயை தடுக்கும்  

வெண்டக்காய் நீரில் நிறைந்துள்ள ஃபோலிக் ஆசிட் புற்றுநோயை தடுக்க உதவுகிறது. 

okhra water benefit

ஆரோக்கியமான கல்லீரல்  

வெண்டைக்காய் நீர் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனுடன் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவுகளையும் குறைக்கலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையுடன் வெண்டைக்காய் நீரை எடுத்துக் கொள்ளலாம். 

மூளையின் செயல் திறனை அதிகரிக்கும்  

வெண்டைக்காயில் உள்ள பொட்டாசியம் மூளையின் செயல் திறனை அதிகரிக்க உதவுகிறது. இது எலும்புகளை வலுப்படுத்தவும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. 

செரிமானம் மேம்படும்  

வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. 

சரும ஆரோக்கியம்  

வெண்டைக்காய் தண்ணீரில் உள்ள வைட்டமின் C கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது சரும ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது. 

இந்த பதிவும் உதவலாம்: விரல்கள் செய்யும் அதிசயம், பெண்களின் 5 பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் யோனி முத்திரை! 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம். 

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com