நம் உடலில் உள்ள நச்சுக்களை அடிக்கடி வெளியேற்றினால் தான் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும். உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் முறை தான் டீடாக்ஸ் என்று கூறப்படுகிறது. உங்கள் உடலில் அதிக அளவு நச்சு இருந்தால் மனம் தெளிவாக இல்லாத நிலை, எப்போதும் சோர்வாக உணர்வீர்கள், களைப்பு, எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வம் இல்லாமல் இருப்பது, வயிறு மற்றும் கால்கள் கனமாக உணர்வது, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்படும். உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், நோய்களிலிருந்து பாதுகாக்கவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் இந்த டீடாக்ஸ் செயல்முறை உங்களுக்கு உதவும்.
உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க இந்த குறிப்புகளை ட்ரை செய்யுங்கள்.
சர்க்கரை உணவுகளை அதிக அளவில் தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு தீங்கு ஏற்படும். இதன் மூலம் உங்கள் உடலின் நச்சுத்தன்மை அதிகரிக்கலாம். ஐரோப்பிய ஆய்வு ஒன்றில், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளும் கொழுப்பு நிறைந்த உணவுகளும் கல்லீரல் நோய்களுக்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கான முக்கிய காரணமாக அமைகிறது.
மேலும் படிக்க: மீன் எண்ணெய் மாத்திரைகளில் இவ்வளவு நன்மைகளா?
மூளை உட்பட நம் உடலில் இருக்கும் அணைத்து உறுப்புகளையும் மது பழக்கம் சேதம் செய்கிறது. மது அருந்துவதால் உங்கள் கல்லீரல் இயல்பான செயல்பாட்டை சீர்குலைக்க செய்யும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மை அதிகரிக்கக்கூடும். மதுவை கட்டுப்படுத்துவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு உதவும் என்று கூறினாலும் மதுவை தவிர்ப்பது தான் சிறந்த வழியாகும்.
காஃபின் உங்கள் உடலுக்கு நல்லதல்ல என்று கூறினால் காபி பிரியர்கள் அதை ஏற்க மறுப்பார்கள். தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் காபி குடிப்பது போதுமானது. அதிக அளவில் காபி குடிக்கும்போது நம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறமுடியாமல் உடலில் தங்கிவிடுகிறது.
தினமும் உடற்பயிற்சி செய்வதால் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்கள் போன்ற பல நோய்களின் ஆபத்தை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. வீட்டில் இருந்தபடியே தினமும் காலை அல்லது மாலை 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தாலே போதுமானது. இது உங்கள் உடலில் இயற்கை முறையில் நச்சுக்களை அகற்றி மன அழுத்தம் குறைய செய்யும்.
பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பீட்ஸா, பர்கர், நூடுல்ஸ் போன்ற ப்ராசஸ்ட் உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடும்போது உங்கள் உடலின் இயற்கையான டீடாக்ஸ் செயல்முறையை தடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மனித உடல் 2/3 பங்கு தண்ணீரை கொண்டுள்ளது என்பது தெரிந்ததே. உணவு சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது நம் செரிமான அமைப்பை சீராக்க உதவும். ஒரு நாளைக்கு குறைந்தது 8 - 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மேலும் படிக்க: பூசணி விதைகளின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!
சரியான உணவு முறையை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது உங்கள் உடலின் நச்சுத்தன்மையை நீக்குவதற்கான சிறந்த வழி. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் அது நச்சுக்களை வெளியேற்ற உதவும். நார்ச்சத்து நிறைந்த பழங்களும் காய்கறிகளும் நம் உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com