இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரும் கருங்குரவை அரிசி குறித்து அறிந்திருக்க மாட்டோம். இன்னும் சிலர் இந்த சிவப்பு அரிசியை பார்த்து கூட இருக்க மாட்டார்கள். இன்றும் பல கிராமப்புறங்களில் கருங்குருவை அரிசி என கூறப்படும் இந்த சிவப்பு அரிசியை தான் பயன்படுத்துவர். இந்த அரிசி தோல் நோய்த் தொற்றுகளை குணமாக்க பெரிதும் உதவுகிறது. ராமாயணம், மகாபாரதம் மற்றும் பல சித்த நூல்களிலும் இந்த கருங்குருவை அரிசியின் மருத்துவ குணங்கள் போற்றப் பட்டுள்ளது.
இந்த சிவப்பு அரிசி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற தென்னிந்தியாவின் சில பகுதிகளுக்கு சொந்தமான ஒரு பாரம்பரிய அரிசி வகை என்று கூறப்படுகிறது. வீட்டில் நாம் பொதுவாக பயன்படுத்தும் வெள்ளை அரிசியை விட இந்த சிவப்பு அரிசியில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உடல் எடை குறைக்க விரும்புவோர் உணவில் இந்த கருங்குருவை அரிசியை சேர்த்து சாப்பிட்டு வரலாம். இது உடலுக்கு ஊட்டச்சத்து அளித்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இந்த சிவப்பு அரிசியில் ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. இது நம் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்க உதவுகிறது. இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் நம் உடலில் உள்ள செல்களை பாதித்து புற்றுநோய், அல்சைமர் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கும். மேலும் இந்த சிவப்பு அரிசியில் நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளது.
மேலும் படிக்க: பருப்பு வகைகளில் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
வெள்ளை அரிசிக்கு பதிலாக சிவப்பு அரிசி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் கெட்ட கொழுப்பு குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆய்வு ஒன்றில் ஆறு மாதங்களுக்கு சிவப்பரிசி சாப்பிடுபவர்களையும் வெள்ளை அரிசி சாப்பிடுபவர்களையும் ஒப்பிட்டு பார்த்தபோது இந்த சிவப்பு அரிசி சாப்பிடுபவர்கள் உடலில் எல்.டி.எல் என்று கூறப்படும் கெட்ட கொழுப்பு அளவுகள் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இது கல்லீரலில் கொழுப்பு சேராமல் தடுத்து ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது.
சிவப்பு அரிசி குறைந்த அளவு கிளைசெமிக் கொண்டுள்ளது, அதாவது இது நம் உணவில் உள்ள குளுக்கோஸை குறைக்க உதவும். இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முயற்சிப்பவர்களுக்கும் இந்த சிவப்பு அரிசி ஒரு சிறந்த உணவாக அமைகிறது. மேலும் சிவப்பு அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் எளிதில் உணவு ஜீரணமாக உதவும்.
சிவப்பு அரிசியில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க இது சிறந்த உணவாகும். நார்ச்சத்து நிறைந்து உணவுகள் உங்களை முழுதாக உணர வைத்து, பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் சிவப்பு அரிசியில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருப்பதால் உடலுக்கு ஆற்றல் தருகிறது.
சிவப்பு அரிசியில் நோய் எதிர்ப்பு மணடலத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த சிவப்பு அரிசியை சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள இரும்புசத்து, வைட்டமின் B6, வைட்டமின் E ஆகியவை இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவும். அதே போல வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் ஈ உங்கள் ரத்த செல்களை சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது.
இந்த சிவப்பு அரிசியில் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை இருப்பதால் இது இதயத்திற்கு ஒரு ஆரோக்கியமான உணவு என்று கூறப்படுகிறது. எல்.டி.எல் எனப்படும் (கெட்ட கொழுப்பு) இதய நோய்க்கான ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மேலும் சிவப்பு அரிசியில் உள்ள மெக்னீசியம் இதயத்தின் இரத்த அழுத்தத்தை சீராக்க பெரிதும் உதவுகிறது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com