கோசுக்கிழங்கு வேர் கொண்ட கிழங்கு வகையை சேர்ந்ததாகும். பார்ப்பதற்கு வெங்காயமும், முள்ளங்கியும் சேர்ந்தது போல் தெரியும். இதை சிவப்பு முள்ளங்கி என்றும் அழைக்கின்றனர். காய்கறி சந்தைகளில் முள்ளங்கி, கேரட் வரிசையில் இதை அடுக்கி இருப்பார்கள். நாம் இந்த கோசுக்கிழங்கை சமையலில் எதற்காக பயன்படுத்துவார்கள் என தெரியாமல் வாங்கமாட்டோம். கல்லீரல், சிறுநீரக ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளும், சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்புகளை தவிர்க்கவும் கோசுக்கிழங்கு உதவுகிறது. இதை காலை நேரத்தில் கேரட் போல தண்ணீரில் கழுவி விட்டு பச்சையாகவும் சாப்பிடலாம்.
130 கிராம் கோசுக்கிழங்கில் 36 கலோரிகள் உள்ளன. அதே போல 8.36 கிராம் கார்போஹைட்ரேட், 2.34 கிராம் நார்ச்சத்து, புரதச்சத்து 1.17 கிராம், கொழுப்பு 0.13 கிராம் நமக்கு கிடைக்கின்றது. ஒரு நாளுக்கு தேவையான வைட்டமின் சி-யில் 30 விழுக்காடு கோசுக்கிழங்கில் இருந்து கிடைக்கும். அதே போல 39 மில்லி கிராம் கால்சியம், 0.39 மில்லி கிராம் இரும்புச்சத்து கோசுக்கிழங்கில் இருக்கிறது. எலும்புகள் வலுபெறுவதற்கு பால் பொருட்கள் மட்டும் போதாது. எலும்பு தேய்மான பிரச்னையை தவிர்க்க கோசுக்கிழங்கு சாப்பிடுங்கள். இதில் குறிப்பிட்ட அளவு கால்சியம் கிடைக்கின்றது.
மேலும் படிங்க தோசை சாப்பிட்டாலே உடல் எடை குறையும், ஆரோக்கியத்திற்கும் உதவும்; எப்படி தெரியுமா ?
கோசுக்கிழங்கை இதுவரை சாப்பிட்டதில்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக உணவுப்பழக்கத்தில் சேருங்கள். சூப் தயாரிப்பு, வேகவைத்து தாளித்து மசித்த உருளைக்கிழங்கு போல் மசித்த கோசுக்கிழங்கு தயாரிக்கலாம். சிலர் கோசுக்கிழங்கில் ஊறுகாய் போடுகின்றனர். கோசுக்கிழங்குடன் சூடுபடுத்தி ஆற வைத்த தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கொஞ்சமாக வினீகர் சேர்த்து பதப்படுத்தி அவ்வப்போது சாப்பிடலாம்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com