தென் இந்தியாவில் பெரும்பாலான மக்களின் காலை உணவு தோசை ஆகும். உளுந்து, அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தோசையை தங்களுடைய உணவுகளை பல நூற்றாண்டுகளாக மக்கள் கொண்டுள்ளனர். ப்ரோபயாட்டிக் உணவான தோசையில் வைட்டமின்களும், கனிமச்சத்துகளும் அதிகம் உள்ளன. தோசையின் ஊட்டச்சத்துகள் அனைத்தும் நம் உடலில் எளிதில் உறிஞ்சப்படும். தோசை எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவாகும். சர்க்கரை நோயாளிகள், உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், நோய் பாதிப்பில் இருந்து குணமடைவோருக்கு தோசை மிகவும் உதவும்.
ஒரு சாதா தோசை சுடுவதற்கு 40-45 கிராம் மாவு தேவைப்படும். இதன் மொத்த கலோரி எண்ணிக்கை 168. கார்போஹைட்ரேட் 29 கிராமும், கொழுப்பு 3.7 கிராமும், புரதம் 4 கிராமும், நார்ச்சத்து ஒரு கிராமும், சோடியம் 94 மில்லி கிராமும், பொட்டாசியம் 76 மில்லி கிராமும், இதர கொழுப்புகள் 2-3 கிராம் இருக்கின்றன. அதே போல வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து தோசை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும்.
ஹோட்டல்கள், கடைகளில் கிடைக்கும் தோசையை சாப்பிட்டு உடல் எடையை குறைக்க முடியாது. ஏனெனில் அங்கு தோசையில் நெய், எண்ணெய் அதிகம் ஊற்றி அதை அதிக கலோரி கொண்டதாக மாற்றிவிடுவார்கள். அதே போல தேங்காய் சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால் எடை இழப்புக்கு தோசை உதவாது. வீட்டில் தோசை சுட்டு சாப்பிட வேண்டும். அதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதை உறுதி செய்யவும்.
மேலும் படிங்க இட்லி சாப்பிட்டே எடையைக் குறைக்கலாம்; எத்தனை இட்லி சாப்பிடணும் தெரியுமா ?
காலை நேரத்தில் தோசை சாப்பிடுவது அன்றைய ஊட்டச்சத்து தேவையை ஓரளவு பூர்த்தி செய்யும். இதில் புரதச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம் என்பதால் எடை இழப்புக்கு கட்டாயம் சாப்பிடலாம். புளிக்க வைத்து தோசை மாவு தயாரிக்கப்படுவதால் செரிமானத்திற்கு உதவும். தோசை சுடுவதற்கு எண்ணெய் அதிகம் ஊற்ற வேண்டாம். கலோரி அதிகரித்தால் தோசை சாப்பிட்டு எடை குறைக்க இயலாது. கேரட், கொத்தமல்லி சேர்த்து தோசை சுடுங்கள்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com