பச்சை பயறு ஒரு சூப்பர் ஃபுட் என்று கூறப்படுகிறது. இதை சமைக்கவும் மிக எளிதாக இருக்கும். இதனை தண்ணீரில் வேகவைத்து உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து அப்படியே சாப்பிடலாம். உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த பச்சை பயறு ஒரு சிறந்த உணவு வகை.
அதே போல இந்த முளைகட்டிய பச்சை பயறு மிகவும் ஆரோக்கியமானவை, ஏன் என்றால் அவற்றில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்த்துக்கள் அதிகம் உள்ளன. சிலர் முளைத்த பருப்பை பச்சையாக சாப்பிடுவார்கள், மற்றவர்கள் கொஞ்சம் வேகவைத்து சாப்பிடுவார்கள். இந்த முளைத்த பச்சை பயறு ஒரு நல்ல சிற்றுண்டியாகும், ஏனெனில் அவற்றில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும் இதில் குறைந்த கலோரிகள் மற்றும் நார்ச்சத்து, புரதம் அதிக அளவு நிறைந்துள்ளது. நம் உடலுக்கு ஆற்றல் தரும் முளைகட்டிய பச்சை பயறு தினமும் காலையில் சாப்பிட்டால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
நம் உடலில் புற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் அமினோ அமிலங்கள் மற்றும் பாலிபினால்கள் எனப்படும் சிறப்புப் பொருட்கள் இந்த முளைகட்டிய பச்சை பயறில் உள்ளன. எனவே இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
தினமும் காலையில் முளைகட்டிய பச்சை பயறு சாப்பிட்டு வந்தால் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இதனை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். இது உங்கள் உடலில் உள்ள சர்க்கரைகளை சிறந்த முறையில் உடைத்து ஜீரணிக்க உதவும்.
இந்த முளைத்த பருப்பை தினமும் காலையில் பச்சையாக சாப்பிடுவது மலம் கழிப்பதை எளிதாக்கவும், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள், வயிற்று பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவுகிறது. நீங்கள் இந்த முளைகட்டிய பயிறை பச்சையாக சாப்பிடும்போது, அவற்றில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும் முழுதாக உங்கள் உடலுக்கு கிடைக்கும்.
தினமும் காலையில் முளைகட்டிய பயிறு சாப்பிட்டு வந்தால், உங்கள் இதயத்தை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க பெரிதும் உதவுகிறது. வேகவைக்காத முளைத்த பருப்பு வகைகளை தினமும் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இது நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைப்பதன் மூலம் நமது இதயத்தை ஆரோக்கியமாக மாற்ற உதவுகிறது. மேலும் இது நம் உடலில் உள்ள இரத்த ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்க உதவுகிறது.
மேலும் படிக்க: கோடைகால உணவில் ஏன் அதிகம் நெய் சேர்க்க வேண்டும்?
முளைகட்டிய பச்சை பயறில் நிறைந்துள்ள பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம் மற்றும் இரும்புச் சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் இரத்த சோகையை சமாளிக்க பெருமளவில் உதவி செய்கிறது. எனவே இந்த முளைகட்டிய பச்சை பயறு பெண்களுக்கு மிகச் சிறந்த உணவாக மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com