உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடிய பல வைட்டமின்களும் தாதுக்களும் வேர்க்கடலையில் நிறைந்துள்ளன. வேர்க்கடலையில் காணப்படும் பீட்டா சிட்டோஸ்டெரால் புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது. வேர்க்கடலை இரும்பு சத்து, ஃபோலேட், துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாகும். ஊறவைத்து வேர்க்கடலையின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகள் பற்றி விவரிக்கிறது இந்த பதிவு.
100 கிராம் வேர்க்கடலையில் உள்ள பின்வரும் ஊட்டச்சத்து தகவல்களை யாவும் USDA அமைப்பால் வழங்கப்பட்டது.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் ஒரு மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்
வேர்க்கடலையில் உள்ள கார்டியோ பிரோடெக்டிவ் பண்புகள் பல்வேறு இருதய பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன. மேலும் நீண்ட காலத்திற்கு இதய நோய் ஏற்படாமல் தடுக்கவும், உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
நீங்கள் முதுகு வலியால் அடிக்கடி அவதிப்படுகிறீர்களா? இதிலிருந்து விடுபட ஊற ஊற வைத்த வேர்க்கடலையுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து தினமும் சாப்பிடலாம்.
வேர்க்கடலையில் நிறைந்துள்ள பீட்டா சிட்டோஸ்டெரால் புற்றுநோயின் அபாயத்தை பெருமளவு குறைக்கின்றன. இது கட்டிகளின் வளர்ச்சியையும், குறிப்பாக மார்பக புற்றுநோயையும் தடுக்கிறது. வாரத்திற்கு மூன்று முறை வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் புற்றுநோயின் அபாயத்தை 58% வரை குறைக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வேர்க்கடலை புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்துக்களின் சிறந்த ஆதாரம் ஆகும். இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன. வேர்க்கடலையை சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்திருக்கும். இதன் மூலம் அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். ஊற வைத்த வேர்க்கடலையை அளவோடு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், உடல் எடையையும் கணிசமாக குறைக்கலாம்.
ஊற வைத்த வேர்க்கடலை குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து மலக்குடல் எரிச்சல் நோய் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தடுக்க உதவுகின்றன. உங்கள் செரிமான மண்டலத்தை சீராக வைத்துக்கொள்ள அதிக அளவு வேர்கடலையை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை, ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையை சாப்பிட்டாலே பல அற்புத மாற்றங்களை பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: 7 நாட்களுக்கு 7 வகையான ஆரோக்கியமான ஜூஸ் வகைகள்
ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையின்றி எவ்வித உணவு முறை மாற்றமும் செய்ய வேண்டாம். உங்கள் அன்றாட உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் மருத்துவரை ஆலோசனை செய்வது நல்லது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com