herzindagi
benefits of eating pomegranate everyday

Pomegranate Benefits : தினமும் ஒரு மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்

ஆரோக்கியம் நிறைந்த மாதுளை உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருகின்றன. இதனை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இப்பதிவில் படித்தறியலாம்…
Updated:- 2023-04-10, 19:20 IST

மாதுளை பழம் வைட்டமின்களின் மிக சிறந்த ஆதாரம் ஆகும். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட், வைரஸ் மற்றும் கட்டிகளை எதிர்க்கும் பண்புகள் நிறைந்துள்ளன. மாதுளை பழங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஆக்ஸிஜன் மாஸ்க்

மாதுளை இரத்தத்தில் ஆக்ஸிஜனை பம்ப் செய்ய உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் கொலஸ்ட்ரால் அளவை குறைகின்றன. மேலும் இது உடலில் இரத்தம் உறைவதையும் தடுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் வெறும் வயிற்றில் என்ன சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் தெரியுமா?

கீல்வாதத்தை தடுக்கலாம்

மாதுளை குருத்தெலும்பு சேதத்தை குறைக்கும். மேலும் இதில் உள்ள சத்துக்கள் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்க உதவுகின்றன.

நினைவாற்றலை மேம்படுத்தும்

ஞாபக மறதி அல்லது நினைவாற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு மாதுளை நல்ல மாற்றத்தை தருவதாக ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆய்வு மேற்கொண்டவர்களுக்கு தினமும் 237 மில்லி மாதுளைச் சாறு கொடுக்கப்பட்டது. மேலும் அவர்களின் வாய்மொழி மற்றும் காட்சி நினைவாற்றலில் நல்ல முன்னேற்றங்களும் காணப்பட்டன.

செரிமான மண்டலம் சீராகும்

மாதுளை பழங்கள் நார்ச்சத்தின் மிகச்சிறந்த ஆதாரமாகும். இவை செரிமானத்தை எளிதாக்குகின்றன. மேலும் நம் அன்றாட நார்ச்சத்து தேவையில் 45 சதவீதத்தை பூர்த்தி செய்கின்றன.

இதய ஆரோக்கியம்

eating pomegranate daily

மாதுளை புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது. இது இரத்தத்தை மெல்லியதாக்குகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் இருதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் சாறு எவ்வாறு உதவுகிறது தெரியுமா?

மன அழுத்தத்தைக் குறைக்கும்

இன்றைய வாழ்க்கை சூழலில் மன அழுத்தம் ஒரு தவிர்க்க முடியாத உணர்ச்சியாகிவிட்டது. மாதுளை உடலின் உள் அழுத்தத்தை குறைப்பதோடு மட்டுமின்றி, நமது வேலை அல்லது வேறு காரணங்களினால் ஏற்படும் உளவியல் அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.

விளையாட்டு செயல்திறனை மேம்படுத்தும்

மாதுளை விளையாட்டு செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது. மேலும் அதிக உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் வலியை குறைத்து, உடலுக்கு வலிமையை தருகிறது. இது உடற்பயிற்சியால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தையும் குறைக்கிறது.

pomegranate health benefits

சர்க்கரை நோய்

பாரம்பரியமாக மத்திய கிழக்கிலும் இந்தியாவிலும் சர்க்கரை நோய்க்கான தீர்வாக மாதுளை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் இரத்த சர்க்கரையை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com