முற்களால் சூழந்த ரம்புட்டான் பழத்தில் உடலுக்கு தேவையான ஒட்டுமொத்த ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளது. ரம்புட்டான் பழத்தின் வெளிப்புறம் கூராகவும் உட்புறம் வெள்ளை நிறத்தில் ஜூஸியாகவும் இருக்கும். இந்த பழம் மலேசியா, இந்தோனேஷியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சாகுபடி செய்யப்படுகிறது. பிற பழங்களுடன் ஒப்பிடுகையில் இதன் விலை உயர்வாக இருந்தாலும் அதிகளவு ஊட்டச்சத்துகளை உடலுக்கு வழங்கக்கூடியது. இதை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
மீடியம் சைஸில் இருக்கும் ரம்புட்டான் பழத்தை ஊட்டச்சத்து ஊற்று என்று சொல்லலாம். இதன் தோல், விதை என அனைத்தும் சத்தானது. 100 கிராம் ரம்புட்டான் பழத்தில் 38 கிலோ கலோரி ஆற்றல், 9.62 கிராம் கார்போஹைட்ரேட், கொழுப்பு 0.04 கிராம், நார்ச்சத்து 1 கிராம், புரதம் 0.76 கிராம் உள்ளது. அதே போல ஏராளமான வைட்டமின்களையும் உள்ளடக்கியது.
ரம்புட்டான் பழத்தை சாப்பிடுவதன் முக்கியமான காரணங்களில் ஒன்றாக செரிமான ஆரோக்கியத்தைக் குறிப்பிடலாம். இந்த பழம் நார்ச்சத்து நிறைந்தது. நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். பழத்தில் குடலுக்கு நன்மை அளிக்கும் பாக்டீரியா உள்ளது. இதனால் அழற்சி எதிர்ப்பு, வயிறு கோளாறு ஆகியவை தவிர்க்கப்படும்.
இந்த பழத்தில் உள்ள வைட்டமின் சி உடலில் தொற்று பாதிப்பை எதிர்த்து போராடும் வெள்ளை அணுக்களை உருவாக்கிடும். வைட்டமின் சி இரும்புச்சத்தை உறிஞ்சவும் உதவும். இதனால் உடலில் இரத்த ஓட்டம் சீரடையும். மேலும் செல் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
பழத்தின் பொட்டாசிய சத்து இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். ரம்புட்டானை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் கெட்ட அளவு குறைந்து நல்ல கொழுப்பு அளவு அதிகரிக்கும். பக்கவாதம் மற்றும் மாரடைப்பை தடுத்து உங்களுடைய ஆயுளை அதிகரிக்கும்.
அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட வைட்டமின் சி நிறைந்த ரம்புட்டான் பழம் சிறுநீரக தொற்றுகளை எதிர்த்துப் போராடும். உடலில் இருக்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் ரம்புட்டான் வெளியேற்றிடும்.
மேலும் படிங்க உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை வாரி வழங்கும் கொத்தமல்லி தண்ணீர்
ரம்புட்டான் பழத்தின் மற்றொரு நன்மை என்னவென்றால் அது இரத்த சோகை பிரச்னைக்கு தீர்வளிக்கும். இரத்த சோகை பிரச்னை உடலில் இரும்புச்சத்து குறைவால் ஏற்படக்கூடியது. இரத்த சோகை இருந்தால் சிவப்பு இரத்த அணுக்கள் ஆக்ஸிஜனை கடத்துவதில் சிக்கல் ஏற்படும். ரம்புட்டான் பழத்தின் மூலம் இதை தடுக்கலாம்.
ரம்புட்டான் பழத்தின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பொடுகு, அரிப்பு பிரச்னைகளை குணப்படுத்தும். இதன் மூலம் தலைமுடி பளபளக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துகள் முடி உதிர்வையும் தடுத்திடும். தலைமுடியின் நிறம் மாற்றம் அடைவதை தடுக்கலாம். முடியின் வேர்களும் வலுவடையும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com