ரசத்தில் தொடங்கி எந்த குழம்பாக இருந்தாலும் தயாரிப்பின் இறுதியில் சேர்க்கப்படும் கொத்தமல்லி ஒரு அற்புதமான மூலிகை பொருளாகும். இது உடலில் சர்க்கரை அளவுகளை குறைக்கும் என நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உடலில் தொற்றுகளை தடுக்க உதவும். இதயம் மற்றும் தோல், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒரு அடி உயரத்திற்கும் குறைவாக வளரும் இந்த கொத்தமல்லி செடியானது உடல்நலனுக்கு பல்வேறு வகைகளில் உதவும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வியட்நாம் நாட்டில் கொத்தமல்லியை சுடு தண்ணீரில் கொதிக்கவிட்டு அதை முகம் கழுவ பயன்படுத்துகின்றனர்.
கொத்தமல்லி தண்ணீர், அதன் விதைகள் மற்றும் கொத்தமல்லி விதை உடலில் இரத்த சர்க்கரை அளவுகளை குறைக்க கூடியது. சர்க்கரை நோய் பாதிப்பு உள்ள நபர்களுக்கு மருத்துவர்களே கொத்தமல்லி தண்ணீரை குடிக்க அறிவுறுத்துவது வழக்கம். மிருகங்கள் மீது சோதனை நடத்தி இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடலில் இரத்த கொதிப்பு மற்றும் கெட்ட கொழுப்புகளை கொத்தமல்லி தண்ணீர் குறைத்து இதய நோய் பாதிப்புகளை தடுக்கும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. குறிப்பாக உடலில் இருந்து சோடியத்தை வெளியேற்றும். கொத்தமல்லி தண்னீர் குடித்தால் உடலில் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும்.
கொத்தமல்லி தண்ணீரின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பல்வேறு நோய்களை தடுக்க கூடியது. கொத்தமல்லியின் ஆன்டிஆக்ஸிடண்ட் பண்புகள் நரம்பு பாதிப்பை தடுக்கும் சுவர் போல் செயல்படும். அதே நேரம் கொத்தமல்லி தண்ணீர் ஞாபக சக்தியை அதிகரிக்கும். பதட்டத்தையும் குறைக்கும்.
கொத்தமல்லி விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் செரிமானத்தை மேம்படுத்தும். சுமார் 32 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குடல் பிரச்னைகளுக்கு 30 சொட்டு கொத்தமல்லி அடங்கிய மருந்தை மூன்று வேளை குடித்தால் வயிற்று வலி, உப்புசம், அசெளகரியம் ஆகியற்றை தவிர்க்க முடியும் என கண்டுபிடிக்கப்பட்டது. பசியின்மைக்கும் கொத்தமல்லி உதவுகிறது.
கொத்தமல்லியின் மருத்துவ குணங்கள் உணவு மூலம் ஏற்படும் நோய்களை தடுக்ககூடியது. ஃபுட் பாய்சனிங்கிற்கு காரணமான பாக்டீரியாவையும் கொத்தமல்லி எதிர்த்து போராடும். குறிப்பாக சிறுநீரக தொற்றுகளை தவிர்க்க கொத்தமல்லி தண்ணீர் உதவும்.
மேலும் படிங்க நீங்கள் தினமும் சாப்பிடும் கத்திரிக்காயின் நன்மைகள் தெரியுமா? -இனிமேல் அதை தூக்கி எறியாதீர்கள்!
தடிப்புகள், தோல் தொடர்பான நோய்களை குணப்படுத்தவும், திசு சிதைவை தடுக்கவும் கொத்தமல்லி உதவும்.
எனவே வீட்டில் எந்த உணவு தயாரிப்பதாக இருந்தாலும் கொத்தமல்லி சேர்ப்பதை தவிர்க்காதீர்கள். உடல் எடையைக் குறைக்க விரும்பினால் நீங்கள் கொத்தமல்லியை ஜூஸ் போட்டு குடியுங்கள்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com