herzindagi
cholesterol free snack green grapes

Grapes Benefits : தினமும் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

பழங்கள் என்றும் எப்போதும் ஆரோக்கியமானவை தான், அதில் ஒன்றான திராட்சையின் நன்மைகளை இப்பதிவில் படித்தறியலாம்…
Expert
Updated:- 2023-04-01, 08:00 IST

கோடையில் ஏராளமான பழங்களை காணலாம். இந்த பருவ காலத்தில் தர்பூசணி, முலாம்பழம், திராட்சை, லிச்சி போன்ற பல பழங்களை சுவைக்கலாம். மதிய உணவிற்கு பிறகு, மாலை நேரத்தில் பசி எடுத்தால் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளுக்கு பதிலாக பழங்களை சாப்பிட முயற்சி செய்யலாம். இது உங்கள் வயிறை நிறைவாக வைத்திருக்கும். இதனுடன் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம்.

அவ்வாறு நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரு பழத்தைப் பற்றி இப்பதிவில் பார்க்கபோகிறோம். இந்த பழம் மருத்துவ குணங்கள் நிறைந்தது மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த ஆரோக்கியமான பழத்தின் நன்மைகளை தெரிந்து கொள்வோம். இந்த தகவல்களை உணவியல் நிபுணர் மனோலி மேத்தா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: கழுத்தை சுற்றியுள்ள கருமை ஒரு தீவிர நோயின் அறிகுறியா !

ஆரோக்கியம் நிறைந்த திராட்சை

cholesterol free grapes

திராட்சை பழங்களின் நன்மைகளை அறிந்தால், அடித்து முறை மார்க்கெட்டுக்கு செல்லும் பொழுது இதனை தவறாமல் வாங்குவீர்கள். திராட்சையில் பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின் K, வைட்டமின் C மற்றும் வைட்டமின் B9 போன்ற சத்துக்களும் ஏராளமாக உள்ளன. இது எந்த நேரத்தில் பசி எடுத்தாலும் சாப்பிடக்கூடிய ஒரு ஆரோக்கியமான தேர்வாக இருக்கும்.

திராட்சையின் நன்மைகள்

  • திராட்சையில் கொலஸ்ட்ரால் முற்றிலும் இல்லை.
  • இது உடலில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அளவை அதிகரிக்க உதவுகிறது.
  • திராட்சை இரத்த நாளங்களைத் தளர்த்தும்.
  • இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் திராட்சை உதவுகிறது.

grapes benefits for health

  • திராட்சையில் உள்ள சேர்மங்கள் லிப்பிட்களைக் கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
  • திராட்சை போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் தசைகள் மற்றும் எலும்புகளின் கனிம அடர்த்தியைப் பாதுகாக்கலாம்.
  • திராட்சையில் பாலிஃபீனால் என்ற சிறப்பு வேதிப்பொருள் உள்ளது. இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
  • திராட்சையில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை சரிசெய்ய உதவுகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க உதவும் யோகாசனங்கள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com