தினசரி காலை எழுந்ததும் காபி டீ குடிப்பதற்கு பதிலாக ஆரோக்கியமான சில பானங்களை குடித்து வரலாம். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அந்த வரிசையில் இந்த இஞ்சி தண்ணீர் ஒரு மந்திர நீர் என்று அழைக்கப்படுகிறது. நம் உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்த உதவும் அத்தியாவாசிய ஊட்டச்சத்துக்கள் இந்த இஞ்சியில் அதிக அளவு நிறைந்துள்ளது. உடல் எடை குறைப்பது முதல் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது வரை இந்த இஞ்சி பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் இந்த இஞ்சி தண்ணீர் குடித்தால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த இஞ்சியில் ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் போன்ற பயோ ஆக்டிவிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது நம் உடலில் உமிழ் நீர் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இது நம் உணவு செரிமானத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நம் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க பெரிதும் உதவும். மேலும் தினசரி காலையில் இந்த இஞ்சி தண்ணீர் குடித்து வந்தால் மூட்டு வலி, இதய நோய் மற்றும் புற்று நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.
ஒரு சில பெண்களுக்கு காலை தூங்கி எழுந்தவுடன் வாந்தி குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த நிலையில் தினசரி காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்து வந்தால் இந்த வாந்தி குமட்டல் மற்றும் வயிற்று கோளாறு போன்ற பிரச்சனைகள் நாளடைவில் குணமாகும் என்று கூறப்படுகிறது.
தினசரி காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்து வந்தால் இந்த இஞ்சியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஒற்றை தலைவலி, மாதவிடாய் தசை பிடிப்புகள் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.
இந்த இஞ்சியில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிக அளவு நிறைந்துள்ளதால் இது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை உடலில் இருந்து வெளியேற்ற பெரிதும் உதவுகிறது. அந்த வரிசையில் தினசரி காலையில் இஞ்சி தண்ணீரை குடித்து வந்தால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்று நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.
இந்த இஞ்சி தண்ணீர் நம் உடலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் சர்க்கரை நோயாளிகளும், நீரிழிவு நோயாளிகளும் இந்த இஞ்சி தண்ணீரை தினமும் காலையில் குடித்து வரலாம்.
தினசரி காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்து வந்தால் நம் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உடலில் தங்கி இருக்கும் கெட்ட கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதனால் நீங்கள் எளிதாக உடல் எடையை குறைக்கலாம்.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com