பச்சை காய்கறிகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்துள்ளன. அதிலும் நீர்ச்சத்து உள்ள காய்கறிகளை பிழிந்து ஜூஸாக எடுத்துக் கொள்வதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறலாம். இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் குடித்து வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்களை உங்களால் உணர முடியும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முதல் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது வரை இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இதனுடன் இளநரை மற்றும் சுருக்கங்களை போக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுரைக்காய் ஜூஸின் ஆரோக்கிய நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்க சுரைக்காய் ஜூஸை வெறும் வயிற்றில் 90 நாட்கள் வரை குடிக்கலாம். சுரைக்காயில் உள்ள நார்ச்சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
சுரைக்காயில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைந்த அளவிலேயே உள்ளன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை நீண்ட நேரத்திற்கு கொடுக்கும். இது பசி ஆர்வத்தை குறைத்து எடை இழப்புக்கு உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் A, C, B, K, இரும்புச்சத்து, பொட்டாசியம், மங்கனீசு போன்ற ஏராளமான வைட்டமின்களும் தாதுக்களும் உள்ளன.
சுரைக்காயில் அதிகமாக காணப்படும் கோலின் உயிர்ச்சத்து மூளையின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது. இதன் மூலம் மனநல பிரச்சனைகளை தடுக்கலாம்.
சுரைக்காய் ஜூஸ் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கை சரி செய்ய உதவுகிறது. இதில் உள்ள 98% நீர் மற்றும் நார்ச்சத்து செரிமான பாதையை சுத்தப்படுத்தி, குடல் இயக்கத்தை எளிமையாக்குகிறது.
சுரைக்காய் ஜூஸ் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி அழகு சார்ந்த பல பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் இயற்கை டீடாக்ஸ் பானமாக அமைகிறது.
வழுக்கை மற்றும் இளநரையை தடுக்க சுரைக்காய் ஜூஸை உச்சந்தலையில் தடவலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க ஆயுர்வேத குறிப்புகள்
இந்த பதிவும் உதவலாம்: எலுமிச்சை நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com