head ache natural instant remedy at home

Natural Remedy for Head Ache : தலை வலியில் இருந்து உடனடி நிவாரணம் பெற இந்த இரு குறிப்பு மட்டுமே போதும்!

அடிக்கடி தலை வலியால் அவதிப்படுகிறீர்களா? இப்பதிவில் பகிரப்பட்டுள்ள நிபுணரின் குறிப்பை பின்பற்றி பயனடையுங்கள்...
Editorial
Updated:- 2023-06-14, 09:32 IST

தலை வலிக்கும் பெண்களுக்கும் பூர்வ ஜெனம பந்தம் இருக்கும் என்று நினைக்கிறேன். மாதவிடாய் நாட்களுக்கு முன்னதாக தொடங்கி, பெண்களை விடாமல் தொடரும் இந்த தலை வலிக்கு என்ன தான் தீர்வு? இதற்கு மாத்திரைகளை எடுத்துகொள்வது நிச்சயம் தீர்வாக இருக்க முடியாது. வேலையில் இடையூறு ஏற்படாமல் இருக்க, வலி தொடங்கும் போதே மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் இப்படி மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வதால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடலாம். 

மன அழுத்தம், பசி, மைக்ரேன், சைனஸ், நீரிழப்பு, மலச்சிக்கல் போன்ற பலவேறு காரணங்களினால் தலைவலி ஏற்படலாம். இதுபோன்ற தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் பெற உதவும் ஒரு எளிமையான குறிப்பை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். இது பற்றிய தகவல்களை டாக்டர் ஸ்ரீவித்யா அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். நிபுணரின் ஆலோசனையை இப்போது விரிவாக பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: காதுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க 3 எளிய குறிப்புகள்!

 

தலைவலிக்கான இயற்கை தீர்வு

water treatment for head ache

தேவையான பொருட்கள்

  • சூடான தண்ணீர் 
  • கல் உப்பு/ எப்சம் உப்பு 

எப்படி செய்வது?

  • முதலில் ஒரு டப் அல்லது பக்கெட்டில் சூடான நீரை ஊற்றவும்.
  • நீர் பொருக்கக் கூடிய சூட்டில் இருக்க வேண்டும் (வெதுவெதுப்பான நீர் அல்லது மிகவும் சூடான நீர் பயன்படுத்துவதை தவிர்க்கவும்)
  • இதனுடன் சிறிதளவு எப்சம் உப்பு சேர்க்கவும். உங்களிடம் எப்சம் உப்பு இல்லையென்றால் கல் உப்பை பயன்படுத்தலாம்.
  • உங்கள் இரண்டு கால்களையும் 10-15 நிமிடங்கள் தண்ணீரில் மூழ்க வைக்கவும்.
  • இதை பின்பற்றினால் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • வெளிச்சம் அல்லது அதிகப்படியான சத்தத்தை தவிரத்திடுங்கள். சிறிது நேரம் நிம்மதியாக தூங்கவும்.

குறிப்பு

head ache doctors remedy

உங்களுடைய கால்களில் ஏதேனும் காயம், இரத்தப்போக்கு, வீக்கம் அல்லது சர்க்கரை நோயால் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தால் இந்த குறிப்பினை பின்பற்ற வேண்டாம் என நிபுணர் வலியுறுத்தி உள்ளார்.

தலை வலி ஏற்படுவதற்கான  முக்கிய காரணத்தை கண்டறிந்து, அதற்கு ஏற்ப உங்களுடைய உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களை மாற்றி அமைக்கவும்.

 

இந்த பதிவும் உதவலாம்: 30 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகள் பலவீனம் அடைவதற்கான காரணம் என்ன?

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com