குழந்தைகள் அதிகமாக மொபைல் பார்க்கிறார்களா? கண்களைப் பாதுகாக்க இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்கவும்.

குழந்தைகளைப் பராமரிப்பதில் அம்மாக்களுக்குப் பெரும் பங்கு உள்ள நிலையில், சில உணவுகளைக் கொடுத்து அவர்களின் கண் பார்வையை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள்.
image

நம்முடைய தாத்தா,பாட்டி காலத்தில் 60 வயதில் தான் கண் ஆபரேசன் செய்ய போகிறேன் என்ற வார்த்தைகளை அதிகளவில் கேள்விப்பட்டிருப்போம். எப்பொழுது தொழில்நுட்பங்களைக் கையாள ஆரம்பித்த காலத்திலிருந்து நிலைமை முற்றிலும் மாறி விட்டது. ஆம் இன்றைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாள் முழுவதும் மணிக்கணக்கில் மொபைல் போன்களில் நமது நேரத்தை செலவிடுகிறோம். இதனால் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை கண் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். சிறு வயதிலேயே கண் ஆபரேசன், கண்ணாடி அணிவது போன்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால் உணவு முறையில் சில உணவுகளைக் கட்டாயம் சாப்பிட முயற்சி செய்ய வேண்டும். அவற்றில் சில உங்களுக்காக..

கண் பார்வையை மேம்படுத்தும் உணவுகள்:

நமது உடலில் உள்ள அனைத்து பாகங்களும் முக்கியமானது என்றாலும் கண்கள் மிகவும் முக்கியமானது. இதைப் பாதுகாப்புடன் வைத்திருப்பது ஒவ்வொருவரின் கடமைகளில் ஒன்றாக உள்ளது. இதற்காக கண் மருத்துவமனைக்குத் தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. உணவு முறைகளின் மூலம் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

healthy food
கண்களைப் பாதுகாக்கும் நெல்லிக்காய்:

நமது கண்களைப் பாதுகாப்பதில் நெல்லிக்காய்க்கு பெரும் பங்கு உள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி குழந்தைகளின் பார்வையைப் பராமரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. எனவே கட்டாயம் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். ஒருவேளை குழந்தைகள் பச்சையாக நெல்லிக்காய் சாப்பிடவில்லையென்றால் ஜூஸாக கொடுக்கலாம். அல்லது தேன் அல்லது வெல்லம் கலந்து காலையில் வெறும் வயிற்றில் கட்டாயம் குடிக்க வேண்டும்.

கேரட்:

கேரட் சாப்பிடு கண் நல்லா தெரியும் என்ற வார்த்தையை சிறு வயதில் அதிகளவில் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆம் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் கொண்ட கேரட்டை பச்சையாகவே அல்லது சாலட்டாகவே உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, கண் செல்களை ரேடிக்கல்களால் சேதமடையாமல் பாதுகாக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் பேருதவியாக உள்ளது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு:

பீட்டா கரோட்டின் அதிகம் கொண்டுள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கும் என்பதால் தாராளமாக கொடுக்கலாம். குறைந்த கொழுப்பு, நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்டுள்ளதால் உடல் பருமனைக் குறைப்பதோடு கண் நோயையும் எதிர்த்துப் போராட உதவுகிறது.

மேலும் படிக்க:கொடுக்காய்ப்புளி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

பாதாம்:

பழங்கள், காய்கறிகளை எந்தளவிற்கு உணவில் சேர்த்துக் கொள்கிறீர்களோ? அந்தளவிற்கு நட்ஸ் வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்ட பாதாம் பருப்பை வாரத்திற்கு மூன்று முறையாவது பயன்படுத்த வேண்டும். அல்லது காலையில் 6-7 பாதாம் பருப்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து தோல் நீக்கி காலையில் சாப்பிடக் கொடுக்கலாம். அல்லது பாதாம் பால் போன்றும் கொடுக்கவும். இதே போன்று ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் கொண்ட கீரைகள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை அதிகளவில் சாப்பிடுவது நல்லது.

Image credit - Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP