குளிர்காலத்தில் என்னென்ன பழங்கள் சாப்பிடலாம் தெரியுமா? முழு விபரம் இங்கே

குளிர்ந்த சூழலில் சில பழங்கள் சாப்பிடுவது உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்பதால் குறிப்பிட்ட பழங்களை மட்டும் உட்கொள்ள வேண்டும் என மருந்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.  
image

குளிர்ந்த காலநிலை மனதிற்கு இதமான சூழலைக் கொடுத்தாலும், இந்த பருவ காலம் உடல் நலத்திற்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதில் கவனமுடன் இருக்க வேண்டும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவின் காரணமாக உடல் வலி. மூட்டு வலி, காய்ச்சல், சளி, இருமல், தொண்டை கரகரப்பு, டெங்கு, மலேரியா போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதைத் தவிர்ப்பதற்கு என்ன தான் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டாலும் உடலுக்கு ஆற்றலை அளிக்கும் சில உணவுப்பொருட்களையும் கட்டாயம் உட்கொள்ள வேண்டும். இந்த வரிசையில் இன்றைக்கு குளிர்காலத்தில் உடல் நலத்தைப் பாதுகாக்கும் வகையில் என்னென்ன பழங்களை உட்கொள்ளலாம்? என்பது குறித்த தகவல்களை இங்கே விரிவாக அறிந்துக் கொள்ளலாம்.

குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள்:

மாதுளை:

அனைத்துப் பருவ காலத்திற்கும் ஏற்ற பழங்கள் என்றாலும், குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய பழங்களின் பட்டியலில் மாதுளைக்குத் தனி இடம் உண்டு. மாதுளையில் உள்ள வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. இதை ஜுஸாகவே அல்லது அப்படியே பழங்களாக உரித்துச் சாப்பிடும் போது உடலின் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்துகிறது.

மேலும் படிக்க:குளிர்காலத்தில் தேங்காய் எண்ணெயோட இந்த 2 பொருளை கலந்து தடவுங்க - உங்க முகம் சூப்பரா ஜொலிக்கும்


கிவி பழங்கள்:

குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய கிவி பழங்கள் உடலுக்கு ஆற்றலை அளிக்கும். பருவ காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுகளைச் சரிசெய்யும் அளவிற்கு இதில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் உள்ளது. மேலும் குளிர்ந்த காற்றால் சருமம் வறண்டு விடுதல் போன்ற பாதிப்புகளைக் குணப்படுத்தவும் கிவி உதவுகிறது.

கருப்பு திராட்சை:

மழை மற்றும் குளிர்காலத்தில் பொதுவாக செரிமான பிரச்சனை ஏற்படுவது இயல்பான ஒன்று. என்ன தான் உணவுகளைக் கட்டுப்பாடுடன் சாப்பிட்டாலும் வளர்சிதை மாற்றம் சீராக நடைபெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால் பருவ காலங்களில் திராட்சையை உட்கொள்வது நல்லது. ஆம் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான அமைப்பை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதையும் தடுக்கிறது. இதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

fruits

ஸ்ட்ராபெர்ரிகள்:

பருவ காலங்களில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை எந்தளவிற்கு உட்கொள்கிறோமோ? அந்தளவிற்கு உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு சீராக இருக்கும். இந்த வரிசையில் குளிர்காலத்தில் ஸ்ட்ராபெர்ரிகள் சாப்பிடுவது சிறந்த தேர்வாக அமையும். இதில் உள்ள வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதே போன்று முலாம் பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா போன்ற பழங்களையும் உட்கொள்வது நல்லது.

மேலும் படிக்க:மழைக்காலத்தில் படுக்கையில் உருவாகும் மூட்டைப் பூச்சிகளை விரட்டியடிக்க எளிய வழிகள்

Image credit - Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP