Foods for Menstrual Cramps: மாதவிடாய் வயிற்று வலியை குணப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்க!

மாதவிடாய் காலத்தில் வலியை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

periods pain ()

பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஏற்படும் ஒரு செயல்முறை தான் இந்த மாதவிடாய். ஒரு சிலருக்கு இந்த மாதவிடாய் 3 அல்லது 4 நாட்கள் இருக்கும், மற்றும் சிலருக்கு 5 அல்லது 6 நாட்கள் இருக்கலாம். மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு அதிகமாக வயிற்று வலி, இடுப்பு வலி அல்லது உடல் சோர்வு போன்றவை ஏற்படுவது வழக்கம். இது மட்டுமல்லாமல் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அஜீரணம், உடல் பிடிப்புகள், வயிற்று கோளாறுகள் போன்ற பல உடல் நலப் பிரச்சினைகளும் ஏற்படும். இது அவர்களின் மனநிலையை அதிகம் பாதிக்கக்கூடும்.

பெண்கள் பலரும் மாதவிடாய் காலத்தில் அந்த வலியை பொறுத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஆனால் இந்த மாதவிடாய் நாட்களில் அதிக வலி ஏற்படுவது அவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் மனநிலை ஆரோக்கியத்திற்கும் நல்லது கிடையாது. ஒருவேளை உங்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் காலத்தில் அதிகமாக வலி இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் வலியை குறைக்க சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

எலுமிச்சை பழம்:

lemon water

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலியை கட்டுப்படுத்த எலுமிச்சை தண்ணீர் பெரிதும் உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எலுமிச்சை பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்து நம் உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் உருவாக உதவுகிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. இந்த மாதவிடாய் காலத்தில் எலுமிச்சை தண்ணீர் அல்லது எலுமிச்சை சோடா குடித்து வந்தால் மனநிலை மாற்றங்கள் மற்றும் உடல் பலவீனத்திலிருந்து பாதுகாக்க முடியும்.

மேலும் படிக்க: மாதவிடாய் சுழற்சி பெண்களின் முடி வளர்ச்சியைப் பாதிக்குமா? முழு விபரம் இங்கே!

தர்பூசணி:

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலியை குறைக்க ஒரு சிறந்த உணவுப் பொருள் இந்த தர்பூசணி. கோடை காலத்தில் மிகப் பிரபலமான இந்த பழம் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் பெரும் உதவியாக உள்ளது. பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வாய்வு பிரச்சனை ஏற்படும். இதிலிருந்து நிவாரணம் அளிக்க தர்பூசணி உதவுகிறது. மாதவிடாய் நாட்களில் தர்பூசணி சாப்பிட்டு வந்தால் வயிற்று உப்புசத்தை குறைப்பதன் மூலம் உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது.

இஞ்சி:

ginger

நம் அன்றாடம் சமைக்கும் அனைத்து உணவுகளிலும் இஞ்சி சேர்ப்பது உண்டு. மாதவிடாய் நாட்களில் பெண்கள் இஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வீக்கம் மற்றும் வயிறு பிடிப்புகள் அதிக அளவு குறைக்க உதவும். இஞ்சியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க பெரிதும் உதவுகிறது. இது ஹார்மோன் சமநிலைக்கு உதவுவதன் மூலம் வயிற்று வலியை குறைக்க பெரிதும் உதவுகிறது.

பீட்ரூட்:

மாதவிடாய் காலத்தில் பெண்கள் பலரும் அடிக்கடி சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்வார்கள். இதற்கு காரணம் அவர்கள் உடலில் அதிக ரத்தப் போக்கு ஏற்படுவது. சில நேரங்களில் நம் உடலில் இருந்து அதிகமான ரத்தப்போக்கு வெளியேறுவதால் ரத்த சோகை ஏற்படும். இதை உடனடியாக குணப்படுத்த ஒரு சிறந்த உணவு தான் பீட்ரூட். மாதவிடாய் நாட்களில் பெண்கள் கண்டிப்பாக பீட்ரூட்டை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆற்றல் கிடைப்பதோடு அதில் இருக்கும் போலிக் அமிலம் மற்றும் இரும்பு சத்து ரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP